Tamil tips for pimple marks, scars, dark spots & pimple spots

முகப்பரு, பெரும்பாலும் முகம், தோள், கழுத்து பகுதிகளில் தோன்றும். முகப்பருவானது, பாக்டீரியாவும் சீழும் நிறைந்த சருமத்தின் ஒரு வீக்கம். சரும மெழுகு சுரப்பிகளிலிருந்து வெளிப்படும் அளவிற்கதிகமான எண்ணை பிசுக்கு, இதற்கு முக்கிய காரணம் எனக் கூறலாம். கவலைக்கிடமானதல்ல எனினும், ஒருவரை சோபை இழந்திட வைக்கும். முகப்பருவானது இளஞ்சிவப்பு வண்ண புள்ளிபோல அல்லது மாசுபோல தோன்றக்கூடும். வீரியமான நிலையில், அதனின்று வெள்ளையாக சீழ் வெளிப்படக்கூடும். சாதாரணமாக, முகப்பரு சில நாட்களில் காய்ந்துவிட்டாலும், அதன் தழும்பானது, முகத்தில் தங்கிவிடும். இதை சிறப்பாக குணப்படுத்த பல கைதேர்ந்த சிகிச்சை முறைகள் உண்டு.

கடைகளில் இந்தத் தழும்புகளை களைய பல பொருட்கள் விற்பனைக்கிருந்தாலும் இயற்கை வைத்தியம் இதற்கு சிறந்தது எனலாம். ஏனெனில், இந்த வகை சிகிச்சையில் பக்க விளைவுகளை இல்லாததோடு, கைக்கடக்கமான விலையில் கிட்டும். முகப்பரு தழும்புகளை நீக்க பலதரப்பட்ட களிம்புகள் கடைகளில் கிடைத்தாலும், அவை வீரியமான ரசாயனங்களை கொண்டு தயாரிக்கப்படுகின்றன. பெரும்பாலும் இவற்றினை உபயோகப்படுத்தாமல் தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக வீட்டிலேயே செய்துகொள்ளக்கூடிய இயற்கை மருத்துவ குறிப்புகள் நலம்.

முகப்பரு தழும்புகளை நீக்க வீட்டு வைத்தியம் ஏன் சிறந்தது? (Why to use natural tamil home remedies to clear pimple marks?)

முகப்பரு தழும்புகள், கறைகள், முகப்பரு புள்ளிகளால் அவதிப்படுவோர் பெரும்பாலும் இளைஞர்கள் தான். அதனால்தான், அவர்கள் எப்போதும், இதற்குண்டான சிறந்த ஒப்பனை சிகிச்சை முறைகளையும், தழும்புகள், வடுக்கள் ஆகியவற்றை குணமாக்கும் பொருட்களையும் தேடி அலைகின்றனர். இம்மாதிரி பொருட்களை ஒருவரின் சருமத்தில், எப்போது எப்படி எத்தனை சிறப்பாக வேலை செய்யும் என கணிக்க முடியாது. சில சரும வகைகள், உடனடியாக இந்த ரசாயன பொருட்களை ஏற்றுக்கொண்டு வேலை செய்யலாம். சில சரும வகைகள் இவற்றை எதிர்க்கலாம். அதைப்போன்ற சரும வகையை சேர்ந்தோருக்கு, வீட்டு மருத்துவ குறிப்புகளே சிறந்த அருமருந்து. இவற்றால் மட்டுமே, முகப்பரு தழும்புகள் மற்றும் வடுக்களை இயற்கையாக குணப்படுத்தி, பக்க விளைவுகளும் இல்லாது, சிறந்த பலனளிக்க முடியும்.

கரும்புள்ளிகள் மற்றும் முகப்பரு தழும்புகளை குணமாக்க, வீட்டு வைத்திய குறிப்புகள். (Tamil remedies for black spots & acne scars)

முகப்பரு வடுக்களை நீக்க சர்க்கரை ஸ்க்ரப் (Sugar scrub to erase pimple marks)

முகப்பரு வடுக்கள் நீங்கி, ஆரோக்யமான, பொலிவுடன் ஒளிர்விடும் சருமத்திற்கான ஒரு மிக எளிதான ஸ்க்ரப். இதை உபயோகிப்பதால் சருமம் மலர்ந்து தளர்ந்து (exfoliate) சரும நிறம் ஒளிவிடச் செய்யும். மூன்று மேஜைக்கரண்டி சர்க்கரை, ஒரு மேஜைக்கரண்டி பால் தூள் மற்றும் ஒரு மேஜைக்கரண்டி தேன். இவை மூன்றையும் நன்றாகக் கலந்து முகத்தில் பூசி, 15 நிமிடங்களுக்கு பின் முகத்தை கழுவி விடலாம்.

முகப்பரு தழும்புகளை மங்கச்செய்ய முட்டையின் வெள்ளை பயன்படுத்துங்கள்.. (Egg white to lighten pimple marks)

முட்டையின் வெள்ளை, முகப்பரு தழும்புகள் மற்றும் வடுக்களை லேசாக்கி மங்கச்செய்யும் திறன் கொண்டது. ஒரு புதிய முட்டையை உடைத்து, அதன் கருவை நீக்கி, வெள்ளையை மட்டும் தனித்து எடுத்துக்கொள்ளுங்கள். அதனை முகத்தில் உள்ள முகப்பரு தழும்புகள் மற்றும் வடுக்களின் மீது பூசி, 10 -15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் சுத்தம் செய்திடுங்கள். புரதமும் உயிர்ச்சத்தும் நிறைந்த முட்டையின் வெள்ளையானது புதிய சரும அணுக்களை உருவாக்கி, பழைய சருமத்தின் வடுக்களை மறையச்செய்யும் குண நலன் பெற்றதாகும்.

ஆப்ப சோடா அல்லது சமையல் சோடா எனப்படும் பொருளைக் கொண்டு முகப்பரு வடுக்களை மங்கச்செய்யலாம். (Baking Soda for lightening pimple scars)

சமையல் சோடா கொண்டு முகப்பரு வடுக்களை மாயமாகச் செய்வதெப்படி என அறிய வேண்டுமா? மிகவும் எளிது. ஒரு தேக்கரண்டி சமையல் சோடாவில் சில துளிகள் தண்ணீர் சேர்த்து, குழைத்து முகப்பரு வடுக்களின் மீது பூசிடுங்கள். இந்த சமையல் சோடாவானது, சருமத்தின் மேல் தோலில், மணல் காகிதம் போல வேலை செய்து, அதிலுள்ள முகப்பரு வடுக்களை நீக்கிவிடும்.  இதை  5 நிமிடங்களுக்கு மேல் முகத்தில் விட்டு வைக்க வேண்டாம். குளிர்ந்த நீரால் நன்றாகக் கழுவி சுத்தம் செய்திடுங்கள்.

முகப்பரு மற்றும் அதன் வடுக்களை நீக்க தக்காளியை உபயோகிக்கலாம். (Tomatoes to remove pimples & scars)

தக்காளியில், வைட்டமின் ஏ (Vitamin A) மற்றும் லைகோபீன் (Lycopene) நிறைந்துள்ளது. அதனால், சருமத்தினை புதிதாக மலரச் செய்து ஊட்டச்சத்தையும் வழங்குகிறது. வைட்டமின் ஏ, முகப்பரு வடுக்களை நீக்குவதோடல்லாமல், பாதிக்கப்பட்ட சருமத்தினை குணமாக்கி விரைவாக, புதிய சரும அணுக்கள் உற்பத்தியாக வழி செய்கிறது. தக்காளி பழங்களை மசித்து குழம்பாக்கி முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து சுத்தம் செய்திடுங்கள். இதனுடன் வெண்ணை பழம் (avacado)  மற்றும் வெள்ளரிக்காய்களையும் கூட சேர்த்துக்கொள்ளலாம். வெள்ளரி அல்லது வெண்ணை பழத்துடன் தக்காளி குழம்பை சேர்த்து, இந்தக் கலவையை முகத்தில் மாஸ்க் போல பூசி, அரை மணி நேரத்திற்குப் பின் குளிர்ந்த நீரால் சுத்தம் செய்திடுங்கள். வாரத்தில் இரண்டு நாட்கள் செய்து வந்தால் மாற்றம் கண் முன்னே…

சோற்றுக்கற்றாழை மற்றும் மஞ்சள் கொண்டு முகப்பரு வடுக்களை களைந்திடலாம். (Aloe vera and turmeric pack to clear scars of pimples)

சோற்றுக்கற்றாழை, பல சத்துக்கள், கூட்டுச்சர்க்கரைகள் (Nutrients, Enzymes and Polysaccharides) நிறைந்த அருமருந்து

இதில் பாக்டீரியா எதிர்ப்பு சக்தி, பூஞ்சை எதிர்ப்பு சக்தி நிறைந்துள்ளது. இது சருமத்தில் உள்ள நச்சுத்தனத்தை அறவே நீக்கி, தோலின் இயற்கையான ஈரப்பதத்தை சமன படுத்துகிறது. மஞ்சளானது, சருமத்தை மலரச் செய்து, முகப்பருவால் ஏற்படும் வீக்கத்தை நீக்கி பொலிவடைய வைக்கிறது. சுத்தமான மஞ்சளை ஒரு தேக்கரண்டி சோற்றுக்கற்றாழை கூழுடன்  கலந்து முகப்பரு வடுக்களின் மீது பூசி 20 நிமிடங்கள் கழித்து சுத்தம் செய்திடலாம்.

முகப்பரு வடுக்கள் மறைய தேயிலை மர எண்ணெய் (Tree oil to get rid of pimple scars)

முகப்பரு வடுக்களை மறையச் செய்ய மிகச் சிறந்த ஒரு வழி, தேயிலை மர எண்ணெய். இது மிகுந்த சக்தி வாய்ந்த எண்ணெய் என்பதோடு, இயற்கையிலேயே, பாக்டீரியா எதிர்ப்பு சக்தி நிறைந்ததும் கூட. 2,3 துளிகள் தேயிலை மர எண்ணையுடன், நல்லெண்ணையும் சில துளிகள் சேர்த்து கலந்து, இதனை முகப்பரு வடுக்கள் மீது பூசி, சில மணி நேரம் ஊறவிடவும். பின்னர் ஈரமான பஞ்சினால் துடைத்தெடுக்கவும். தேயிலை மர எண்ணெய் முகப்பரு வடுக்களை குணமாக்குவதோடு மேற்கொண்டு வராமல் தடுக்கவும் உதவும்.

முகப்பரு புள்ளிகளை நீக்க எலுமிச்சை (Lemon to treat pimple spots)

எலுமிச்சையில் உள்ள உவர்ப்புத் தன்மை, முகப்பருவினால் பாதிக்கப்படும் சருமத்தின் மீது மாயமாக வேலை செய்யும். வைட்டமின் சீ (Vitamin C) நிறைந்ததால், சருமத்தை மேம்படுத்த உதவுகிறது.அரை எழுமிச்சையினை பிழிந்து, அதனுடன் இரு பங்கு கிளிசரின் (glycerin) சேர்த்து கலந்து, முகத்தின் மீது பூசி, பத்து நிமிடங்கள் கழித்து சுத்தம் செய்யலாம். நாளுக்கு இருமுறை இப்படி செய்து வந்தால், சில நாட்களில் நல்ல மாற்றம் காணப்படும்.

முகப்பரு வடுக்கள் மறைந்து, பொலிவான முகத்திற்கு, சந்தன பேஸ்பாக் (Sandal wood face pack for scar free skin)

சந்தனம் மிகவும் அதிசயமானதொரு மரம். மனித முகம் மற்றும் உடலுக்கு, பற்பல மாயங்கள் செய்யக்கூடிய அறியதன்மை உள்ளது சந்தனம் என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சந்தனக் கட்டையை கல்லில் உரைத்து, பன்னீர் சேர்த்து அரைக்கவும். நீர்க்க அரைத்த இந்த சந்தனத்தை, முகப்பரு வடுக்கள் மற்றும் தழும்புகள் மேல் பூசிடுங்கள். முழுவதும் காய்ந்ததும் தண்ணிரினால் சுத்தம் செய்திடலாம். நாளுக்கு இரு வேளை இப்படி செய்துவந்தால் ஒரு வாரத்தில் நல்ல பலன் தரும்.

சரும புடைப்புகளிலிருந்து நிவாரணம் காண, தேன், மஞ்சள் மற்றும் பால் கலந்த பேஸ்பாக் (Honey, turmeric and milk face pack to clear bumps on face)

ஒரு கிண்ணத்தில், இரண்டு மேஜைக்கரண்டி தேன், அரை மேஜைக்கரண்டி மஞ்சள் தூள், இரண்டு மேஜைக்கரண்டி பால் மற்றும் சில துளிகள் பன்னீர் சேர்த்து நன்றாக குழைத்து, இதனை முகப்பரு வடுக்கள் மீது பூசிடுங்கள். 20 நிமிடங்கள் கழித்து, தண்ணீரினால் சுத்தம் செய்திடலாம். இதை தினசரி செய்துவந்தால், ஒரு வாரத்தில் முகப்பரு வடுக்கள் மெல்ல மறைவதைக் காணலாம். இதனை முகம் முழுவதிலும் கூட பூசிக்கொள்ளலாம்.

கிச்சிலிப்பழம் கொண்ட பேஸ்பாக் முகப்பரு தழும்புகள் மறைய உதவும் (Citrus face pack to get rid of pimple marks)

இந்த பேஸ்பாக், முகப்பரு தழும்புகள் மறைய மிகச் சிறந்ததொரு வழி. கிச்சிலிப்பழம் மார்கெட்டுகளில் கிடைக்கும். இல்லையெனில், எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற பழங்களையும் கூட இதற்கு உபயோகப்படுத்தலாம். இவை அனைத்திற்கும் உவர்ப்புத் தன்மை அதிகம், ஆதலால் முகப்பரு தழும்புகளை நீக்க உதவும். முல்தானி மண் (Multani Mitti) இரண்டு மேஜைக்கரண்டி எடுத்து, ஒரு மேஜைக்கரண்டி கிச்சிலிப்பழச் சாருடன் கலந்து கொள்ளுங்கள். தேவை ஏற்பட்டால் சில துளிகள் தண்ணீர் சேர்த்து நன்றாக குழைதுக்கொள்ளுங்கள். தழும்புகள் மீது பூசி இருபது நிமிடம் ஊறவிட்ட பின் கழுவிடலாம்.

தெளிவான சருமத்திற்கு ஜாதிக்காய் (Nutmeg for clear skin)

முகப்பரு வடுக்கள் தழும்புகள் நிறைந்த சருமத்தைக் கண்டு கவலையா, விரைவான தீர்வுக்கு, இதனை முயன்று பாருங்கள். சில கும்குமப்பூ இழைகளை ஒரு தேக்கரண்டி பச்சைப் பாலில், முந்தைய இரவு ஊறவைத்திடுங்கள். காலையில், அதில் ஒரு தேக்கரண்டி ஜாதிக்காய் தூளினை சேர்த்து, நீர்க்க கரைத்திடுங்கள். இதனை முகப்பரு தழும்புகள் மீது பூசி இருபது நிமிடம் ஊறவிடுங்கள். பின் தண்ணீரில் சுத்தம் செய்திடுங்கள். பொலிவான சருமத்தை பெற, முகம் முழுவதிலும் கூட இதனை பூசிக்கொள்ளலாம். தினசரி உபயோகித்தால் நல்ல பலன் தரும்.

முகப்பரு தழும்புகளை நீக்க ஆரஞ்சு பழத்தோல் பாக்  (Orange peel pack to get rid of pimple marks)

ஆரஞ்சுபழத்தோல், முகப்பரு வடுக்களையும், தழும்புகளையும் லேசாக்கி, மறையச்செய்யும் மிகச் சிறந்த நிவாரணி. சில ஆரஞ்சு பழத்தோலினை, பாலில், முந்தைய இரவு ஊறவிடவும். காலையில் இதனை பாலுடனேயே அரைத்து விழுதாக்கி, முகப்பரு வடுக்கள் மற்றும் தழும்புகள் மீது பூசிடுங்கள். முகம் முழுவதிலும் கூட பூசிக்கொள்ளலாம். அரை மணி நேரம் கழித்து தண்ணீரினால் சுத்தம் செய்திடுங்கள். தினசரி உபயோகிப்பது அவசியம்.

முகப்பரு தழும்புகளுக்கு உருளைக்கிழங்கு சாறு (Potato juice for pimple marks)

உருளைகிழங்கின் சாறு, முகத்தின் சரும நிற மாற்றத்தை, மிகச் சிறந்த வகையில் பாதுகாக்கும் திறன் கொண்டது. நீங்கள், முகப்பரு தழும்புகளால் அவதிப்படுவதாக இருப்பின், இந்த உருளைச் சாறு மிக நல்ல நிவாரணி. உருளையினை கசக்கி சாறு பிழிந்து கொள்ளவும். இதனை முகப்பரு தழும்புகள் மீது பூசவும். உருளையினை விழுது போல அரைத்தும் முகப்பரு தழும்புகள் மீது பூசலாம். சாறாகினும், விழுதாகினும், கருத்துப்போகும் வரை முகத்தில் விட்டுவைக்க வேண்டும். பின் முகத்தை ஈரப்படுத்தி தேய்த்து கழுவி சுத்தம் செய்திடுங்கள்.

கொக்கோ வெண்ணை முகப்பரு தழும்புகள் விரைவாக குணப்படுத்த ஒரு நல்ல தீர்வு. (Cocoa butter for healing the pimple marks quickly)

சாதாரண மற்றும் உலர்ந்த சருமம் உடையோருக்கு மட்டுமே, இந்தத் தீர்வு ஏற்றதாக இருக்கும். கொக்கோ வெண்ணையில் (Cocoa butter) மிகச் சிறந்த ஈரப்பதம் நிறைந்துள்ளது. இது இயற்கையாகவே சரும கோளாறுகளை குணமாக்கும் திறன் கொண்டது. இரவு படுக்கும் முன் டோனர் (Toner) கொண்டு முகம் சுத்தப்படுத்தி, அதன் பின் கொக்கோ வெண்ணையை பூசிக்கொண்டு உறங்கவும். காலையில் தண்ணீரினால் கழுவி சுத்தப்படுத்தவும். தினசரி இப்படி செய்து வந்தால் 15 நாட்களில் நல்ல பலன் கிடைக்கும்.

பாலில் ஊறவைத்த வெந்தயம் முகப்பரு தழும்புகளை நீக்கவல்லது (Fenugreek seed with milk for removing pimple scars)

வெந்தயத்தில் நிறைந்துள்ள என்சைம்ஸ் (enzymes), சருமத்தின் இயல்பை மீட்டுத் தந்து உயிரூட்டக்கூடிய தன்மை நிறைந்தது. பாலில் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை முந்தைய இரவு ஊறவைத்திடுங்கள். காலையில் அதனை மென்மையான விழுதாக அரைத்து, முகப்பரு தழும்புகளில் பூசிடுங்கள். முகம் முழுவதிலும் கூட பூசிடலாம். 20-30 நிமிடங்கள் வைத்திருந்தபின் நன்றாக தண்ணீரினால் அழுந்த தேய்த்து கழுவிடலாம்.

தயிர் மற்றும் வெள்ளரிக்காய் பாக் முகப்பரு தழும்புகளை நீக்க உதவும். (Yogurt and cucumber pack for pimple marks)

தயிரில் ஈரத்தன்மை மிகுந்துள்ளது. அதோடு அதிலுள்ள என்சைம்ஸ் (enzymes), எந்தவிதமான வடுக்களையும் மங்கச் செய்யும் வல்லமை பெற்றது. வெள்ளரிக்காய், சருமத்தை மென்மையாக்கி புத்துணற்ச்சியுடன் விளங்கச்செய்யும் தன்மை உடையது. வெள்ளரிக்காயை நசுக்கி, ஒரு மேஜைக்கரண்டி தயிரில் கலந்து, இதனை முகப்பரு வடுக்களின் மீதோ, முகம் முழுவதுமோ பூசிடுங்கள். இருபது நிமிடங்கள் கழித்து சுத்தம் செய்திடுங்கள். வாரத்தில் மூன்று முறை இவ்வாறு செய்துவந்தால் 15 நாட்களில் நல்ல பலன் கிட்டும்.

தேங்காய் எண்ணெய் முகப்பரு புள்ளிகளை முழுவதுமாக அகற்றும் வல்லமை பெற்றது. (Coconut oil for erasing pimple spots)

தேங்காய் எண்ணையில் அதீதமான ஈரப்பதம் இருப்பதால், தினசரி உபயோகிக்கையில் முகப்பரு புள்ளிகளை, சருமத்தின் உள்ளிருந்து குணமாக்கி சருமத்தினை பொலிவடையச் செய்கிறது. ஒரு தேக்கரண்டி உயர்ரக இயற்கையான தேங்காய் எண்ணையை எடுத்து, முகப்பரு புள்ளிகளின் மீது மென்மையாக தேய்த்திடுங்கள். இரவு முழுவதும் அப்படியே விட்டு, காலையில் மென்பஞ்சினால் துடைத்துவிட்டு, நிறைய தண்ணீர் கொண்டு நன்றாக  கழுவி விடவும்.

முகப்பரு வடுக்களை நீக்க ரோஸ் ஹிப் எண்ணெய் (Rose-hip oil for removing scars)

ரோஸ் ஹிப் எண்ணெயில் நிறைந்துள்ள டிரான்ஸ் ரெட்டினோயிக் ஆசிட் (trans-retinoic oil) சருமத்தை குணப்படுத்தி, வடுக்களையும், அனாவசியமான தழும்புகளையும், முகக்கறைகளையும் முழுவதுமாக நீக்கி, அற்புதங்கள் செய்திடும் வல்லமை பெற்றது. இதில் பிசுபிசுப்பு இல்லாததால், எண்ணெய் சருமம் உள்ளவரும் இதை உபயோகிக்க வல்லது. ஒரு துளி ரோஸ் ஹிப் எண்ணையை முகப்பருக்கள் மீது அழுந்த தேய்த்து, இரவு முழுவதும் ஊறவிடவும். காலையில் நிறைய தண்ணீரினால் கழுவி சுத்தம் செய்திடவும்.

பப்பாளிப் பழம் முகப்பரு தழும்புகளை நீக்க வல்லது. (Papaya for lightening pimple marks)

பப்பாளிப் பழம், ப்ளீச்சிங் (bleaching) எனப்படும் வெளுப்பாக்கிடும் தன்மை கொண்டது. இதில் நிறைந்துள்ள என்சைம்ஸ் (enzymes) முகப்பரு தழும்புகளை லேசாக்கி மங்கச்செய்து மாய்த்திடும் தன்மை கொண்டது. பப்பாளிப் பழத்தின் ஒரு விள்ளலை எடுத்து, முகப்பரு தழும்புகள் மீது 5 முதல் 7 நிமிடங்கள் வரை அழுந்த தேய்த்து, 15 – 20 நிமிடங்கள் ஊறவிடவும். பின்னர் குளிர்ந்த நீரால் கழுவிடுங்கள். தினசரி இரண்டு வேளை இப்படி செய்துவந்தால், இதன் பலனை கண்ணாரக் காணலாம்.

பச்சை இளநீரினால் முகம் கழுவி, முகப்பரு தழும்புகளை மாயம் செய்யலாம். (Green coconut water for erasing pimple spots)

உங்கள் சருமத்தில் உள்ள முகப்பரு வடுக்களையும், தழும்புகளையும், மெல்ல மெல்ல மங்கச் செய்து, மாயமாக்க, இது ஒரு மிக எளிமையான வழி. முகப்பரு தழும்புகளாலும் வடுக்களாலும் பாதிக்கப்பட்ட முகத்தையோ அல்லது உடலின் வேறே பாகங்களையோ, பச்சை நிற இளநீரினால் பல முறை கழுவுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அப்படி கழுவியபின், தண்ணீரினால் முகத்தை கழுவாதீர். முழுமையாக இளநீர் காய்ந்தபின், தண்ணீரினால் கழுவி, அதன் பின் ஈரப்பத குழம்பினை (Moisturiser) பூசிடுங்கள்.

முகப்பரு தழும்புகளை நீக்க சில குறிப்புகள் (Tips to take care of pimple scars)

  • புதிதாக முகப்பரு வரும் நேரங்களில், ஸ்க்ரப் (scrub) உபயோகிப்பதை தவிர்த்திடவும்
  • முகப்பரு வந்து காய்ந்தபின், அதில் உள்ள உலர்ந்த சரும உயிரணுக்களை (cell) நீக்கிடுவது அவசியம். அப்படி செய்தால் மட்டுமே, புதிய சரும உயிரணுக்கள் உற்பத்தியாக வழி செய்ய முடியும்.
  • நிறைய தண்ணீர் அருந்துவதும் பழங்கள் உண்ணுவதும் சருமத்தை பாதுகாக்க உதவும்.
  • முதிர்ந்த முகப்பருக்களை, தொடவோ, அமுக்கவோ, நசுக்கவோ கூடாது. இது சருமத்தின் மேல்தொலினை நாசமாக்கக்கூடும்.

முகப்பருவிலிருந்து விடுபட, முகப்பரு தழும்புகள், வடுக்கள், புள்ளிகளை விரைவாகக் களைய, மேலே குறிப்பிட்ட எந்தவொரு வீட்டுக் குறிப்புகளையும் நீங்கள் முயற்சித்துப் பார்க்கலாம்.