Tamil tips for acne scars, marks, spots & pimple spots

முகப்பரு, பருவ பெண்களுக்கு மிக சகஜமாக வரக்கூடிய ஒன்று. பூப்பெய்தும் வயதிற்கே உரிய சில ஹார்மோன் மாற்றங்களில் இதுவும் ஒன்று.

எனினும், முதிய வயது பெண்களுக்கும் கூட முகப்பரு ஏற்படுகிறது. இதன் காரணம் ஹர்மொன் அல்ல.

ஒவ்வொருவரின் வாழ்க்கை முறையின் மாற்றங்கள், உண்ணும் உணவின் கலப்படம், இவற்றை ஒட்டி இது மாறுபடும்

எண்ணைத் தன்மை மிகுந்த சருமத்தில் முகப்பரு தோன்றுவது மிக சாதாரணம்.

உடம்பின் அதிகபட்சமான எண்ணை, முகச்சரும துவாரத்திலிருந்து விடுபட முயலும்போது, இது போன்ற பருக்கள்  ஏற்படுவது சகஜம்.

முகப்பரு புள்ளிகள், தழும்புகள், இவற்றை நீக்க, வீட்டிலேயே செய்யக்கூடிய இயற்கை முறை தீர்வுகளை இங்கே காண்போம்.

முகப்பருவினால் அவதிப்படும் ஒவ்வொருவருக்கும் இதனால் ஏற்படும் வடுக்களையும் கரும்புள்ளிகளையும் தழும்புகளையும் மாற்றுவது என்பது பெரும் பிரச்சினைக்குரியது. விலை உயர்ந்த களிம்புகளும் சருமத்தை பாதுகாக்க பயன்படும் ஈரப்பத க்ரீம்களினாலும் கூட இவற்றை துடைத்தெறிவது அவ்வளவு எளிதானதாக இல்லை.

ஆனால், எளிய வழிமுறைகளைக் கொண்டு, இந்த பருக்களையும் அதனால் ஏற்படும் தழும்புகளையும் களைந்தெறிவது எப்படி என்று உங்கள் பாட்டியின் வாய் மூலம் கேட்டிருப்பீர்கள்தான்.

பலரும் அதனை பெரிதாக கருதாமல் விட்டிருப்பர். ஆயினும், இன்றைய காலகட்டத்தில் இந்த எளிய வழிமுறைகளுக்குதான் பெரிய மகத்துவம்.

இந்த எளிய மருத்துவ குறிப்புகள், முகப்பருவினால் ஏற்படும் வடுக்களையும் தழும்புகளையும் லேசாகச் செய்யும் திறன் பெற்றது.

ஒவ்வொரு பெண்ணும் தன் முகப்பரு வடுக்களிலிருந்து விடுபடவே ஆசைப்படுவாள்.

சமீப காலம் வரை வடுக்களை முழுமையாக நீக்க ஒரு தீர்வும் இருக்கவில்லை. ஆனால், இன்றைய தொழில்நுற்ப வளர்ச்சியின் வாயிலாக, வடுக்களை முழுமையாக மறையச்செய்யும் திறன் பெற்ற பற்பல சிகிச்சை முறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

பலருக்கும் முகப்பருவினால் ஏற்பட்டுள்ள தழும்புகள், வம்சாவழியாக வந்த முகச்சரும பலனாக இருக்கும்போதிலும், அவற்றை வராமல் தடுக்கவும், உள்ளவற்றை பெரும்பாலும் மறையச் செய்யவும், பல  எளிய சிகிச்சை முறைகள் மிகச்சுலபமாக கைவசமாகியுள்ளன.

உங்களது சரும தழும்புகளை நீக்க பயனுள்ள தீர்வு காண விழைகிறீர்களா? எனில் தொடர்ந்து படிக்கவும்…(Are you looking out for productive remedies to heal acne blemishes? If yes then read further)

முகப்பரு வடுக்களை நீக்கவென சில ஒப்பனை சிகிச்சைகள் இருக்கும்போதிலும், இவை முழுமையாக வடுக்களை மறையச் செய்யும் என உத்தரவாதம் இல்லை.

வீட்டிலேயே செய்யக்கூடிய சில எளிய தீர்வுகளைக்கொண்டு இந்த வடுக்களை மெல்ல மெல்ல மறையச் செய்யவும், மீண்டும் அவை தோன்றாத வகையில் நம்மை நாமே தற்காத்துக்கொள்ளவும் முடியும்.

முகப்பரு தழும்புகள், வடுக்களில் இருந்து விடுபட, வீட்டிலேயே செய்யக்கூடிய சில சிறந்த சிகிச்சைகள் இதோ. (Here are some of the tamil  home remedies for Acne Scars)

வெந்தயம், முகப்பரு வடுக்களை நீக்க, மிகச்சிறந்த பலனளிக்கக்கூடிய மூலப்பொருள்.

வெந்தய இலைகளை விழுதாக அரைத்து முகத்தில் மாஸ்க் போல உபயோகிக்கலாம்.

 • வெந்தயத்தை நீரில் கொதிக்கவைத்து, பின் அதை விழுதாக அரைத்து ஒரு குளிர்ந்த இடத்தில பாதுகாத்துக்கொள்ளவும். இந்த விழுதை வடுக்களின் மீது பூசி, 15-20 நிமிடங்கள் ஊறிய பின், குளிர்ந்த நீரால் கழுவிவிடவும்.
 • எலுமிச்சை சாரினை பஞ்சினால் தொட்டு முகப்பரு தழும்புகளின் மீது தடவவும். சிறிது நேரம், சருமம், எழுமிச்சைசாற்றினை உள்வாங்கியதும், வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவவும். எலுமிச்சை இயற்கையான வெள்ளாவி போன்ற திறன் கொண்டது. இதன் பயனால், முகப்பரு வடுக்களும் தழும்புகளும் நிறம் மாறி வெளுத்து முகத்திற்கு பொலிவூட்டும்.
 • சந்தனுமும் பன்னீரும் (ரோஜாநீர்) கலந்து களிம்பு போலாக்கி அதனை முகப்பரு வடுக்களின் மீது பூசி, ஒரு மணி நேரம் ஊற விடவும். (இரவு முழுவதும் ஊறவிட முடிந்தால் மிக்க நலம்) பின் குளிர்ந்த நீரால் முகம் கழுவி விடவும்.
  இது வடுக்கள் மற்றும் தழும்புகள் மறைய மிகச்சிறந்த பலன் தரக்கூடியது.
 • சைத்தூண் எனப்படும் ஆலிவ் ஆயில்(Olive Oil), ஒரு அதிசயமான சரும ஊட்டச்சத்து கொடுக்கக் கூடிய அருமருந்தாகும். தொடர்ந்து முகத்தில் பூசி வந்தால் வடுக்களை மறைய செய்வதோடல்லாமல் மீண்டும் தோன்றாமல் பாதுகாக்கும். தினமும் வடுக்களின் மீது தேய்த்து வர, சருமம் மென்மையாக ஆவதோடுமட்டுமல்லாமல் தழும்புகளின் தீவிரம் மங்கி மறைந்துவிடும்.
 • வெள்ளரிக்காய், சருமத்தை மிருதுவாகவும் மென்மையாகவும் வைக்கக் கூடிய தன்மை உடையது. சில தலை சிறந்த ஒப்பனை பொருட்களில் வெள்ளரிக்காய் முக்கிய மூலப்பொருளாக உள்ளது.

அதோடல்லாது நெல்லிக்கனியை கொண்டு உருவாக்கிய பல சிறந்த ஒப்பனை களிம்புகள் மற்றும் குழம்புகளில், முகப்பரு வடுக்கள் தோன்றுவதையும், தழும்புகளை அறவே நீக்கும் தன்மையும் நிறைந்துள்ளன.

 • லேசான, எண்ணைபிசுக்கு இல்லாத, எண்ணெய் தன்மை சேராத, ஒப்பனை சாமான்களை உபயோகிப்பது நல்லது. வடுக்களையும் தழும்புகளையும் அப்போதைக்கு மறைக்கக் கூடிய பல ஒப்பனை களிம்புகள் கடைகளில் கிடைக்கின்றன.
 • தேயிலை மர எண்ணை (tea tree oil), முகப்பரு வடுக்களை மறையச் செய்யும் ஒரு மிகச்சிறந்த அருமருந்து. ஆஸ்திரேலிய நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இந்த எண்ணை, முகப்பரு வடுக்களை குணமாக்கவும், இனி வராமல் தடுக்கவும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
 • பனிக்கட்டிகளை முகப்பரு தழும்புகளின் மீது தேய்த்து வருவது பலருக்கு வழக்கம். மெல்லிய பஞ்சு துணி ஒன்றில் பனிக்கட்டியினை பொதிந்து, அதை முகத்தில் உள்ள தழும்புகள் மீது தினமும் 15 -20 நிமிடங்கள் மெல்ல தேய்த்து வந்தால், சருமம் மிருதுவாக ஆவதோடு மட்டுமல்லாமல், முகத்தில் உள்ள வீக்கமும் குறைய உதவும். இது முகப்பருவிற்கான ஒரு தலைசிறந்த தீர்வு
 • சோற்றுகற்றாழை (Aloe Vera) வழக்கமாக எல்லோராலும் உபயோகப்படுத்தப்படும் முகப்பரு தழும்புகளுக்கான தீர்வு.

சோற்றுகற்றாழை செடியானது, தழும்புகளையும் வெட்டுக்காயங்களையும் மாயமாக குணமாக்கக்கூடிய அற்புத திறன் கொண்டது. இதன் சாறு, முகப்பரு வடுக்களை குணமாக்கவும், மேலும் வராமல் தடுக்கவும் பரவலாக உபயோகப்படுத்தப்படுகிறது. தினமும், இந்த சாற்றினை தழும்புகளின் மேல் பூசி வந்தால் அவை மெல்ல மறைந்து சருமமும் பொலிவடையும்.

முகப்பருவினால் ஏற்படும் வடுக்கள் தழும்புகள் மற்றும் புள்ளிகளிலிருந்து விடுபட மேலும் சில எளிய தீர்வுகள். ( Some more tamil home remedies for acne scars, marks and spots)

தேன் பேஸ்பாக்  (Honey face pack)

இரண்டு தேக்கரண்டி சுத்தமான தேனினை எடுத்து முகம் மீது தடவவும். முக்கியமாக, முகப்பரு வடுக்கள், தழும்புகள், புள்ளிகள் இருக்கும் இடத்தில பூசி, 15-20 நிமிடங்கள் ஊறவிடவும். பின் வெதுவெதுப்பான நீரினால் முகத்தை சுத்தம் செய்யவும். மேலும் சிறப்பான பலனை அடைய, இரவு தேனைப் பூசி, அப்படியே வைத்திருந்து காலையில் முகத்தை சுத்தப்படுத்தலாம். இந்த மிக எளிமையான பேஸ்பாக் நாளடைவில் முகப்பரு தழும்புகளையும் வடுக்களையும் மறையச் செய்யும்.

ஓட்ஸ் பேஸ்பாக் (Oatmeal face pack)

இன்றைய தினத்தில், ஒவ்வொரு வீட்டிலும் ஓட்ஸ் மிக சகஜமாக உபயோகப்படுத்தப்பட்டு வருகின்ற ஒன்றாகும், ஏனெனில், மக்கள் ஆரோக்யத்தில் மிகவும் சிரத்தையும் நாட்டமும் கொண்டு, பெரும்பாலும், ஒட்ஸினை காலை சிற்றுண்டி, மதிய உணவு, இரவு உணவு ஏதேனும் ஒன்றில் கட்டாயமாக கலந்துண்ணத் துவங்கி உள்ளனர்.

கால் கப் ஓட்ஸில், இரண்டு மேஜைக்கரண்டி தேனைக் கலந்து, இதனை முகத்தில் காணப்படும் முகப்பரு மற்றும் தழும்புகள் மீது தடவ வேண்டும். முக்கியமாக 15 – 20 நிமிடங்கள் ஊரவிட்டு பின்னர், வெதுவெதுப்பான நீரினால் சுத்தம் செய்ய வேண்டும். இப்படிச் செய்வதனால் பேஸ்பாக்கினை மிகவும் நன்றாக சுத்தம் செய்ய ஏதுவாகும்.

இலவங்கப்பட்டை பேஸ்பாக் (cinnamon face pack)

இலவங்கப்பட்டை ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயமாக இருப்பது அவசியம். பொடி செய்யப்பட்ட இலவங்கப்பட்டையும் கூட இப்போது மார்கெட்டுகளில் கிடைக்கின்றது. இலவங்கப்பட்டை, முகப்பரு வடுக்கள், தழும்புகள், கரும்புள்ளிகளை நீக்குவதில் பெரும் பலன் அளிக்கக்கூடியது என அறிந்து நீங்கள் மகிழ்ச்சி கொள்ளலாம். இதன் சிறந்த பலனை அடைய, இலவங்கப்பட்டை பொடியை ஒரு கிண்ணத்தில் இட்டு, அதில் ஒரு தேக்கரண்டி தேனினை கலந்து, முகப்பரு தழும்புகள் மீது பூச வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரினால் முகத்தினை சுத்தம் செய்யலாம்.

ஆஸ்பிரின் பேஸ்பாக் (Aspirin Face Pack)

முகத்தின் கரும்புள்ளிகளை நீக்க மிகச்சிறந்த வழி. ஆஸ்பிரின், இயற்கையான ஒரு பொருள் அல்ல எனினும், தேனுடன் கலந்து உபயோகிக்கும்போது, இது முகப்பரு தழும்புகள் மற்றும் முகப்பரு  மீது மிகச் சிறப்பாக வேலை செய்யும்.

இந்த பேஸ்பாக்கினால் சிறப்பாக பலனடைய தேவையான பொருட்கள்: இரண்டு மேஜைக்கரண்டி தேன், சில துளிகள் தண்ணீர் மற்றும் 2,3 ஆஸ்பிரின் (Aspirin). ஆஸ்பிரினை சில துளி தண்ணீரில் வைத்து, அது கரைந்ததும் அதனுடன் தேன் கலந்து நல்லதொரு களிம்பு போல செய்யவேண்டும். அதிகம் தண்ணீர் சேர்க்காமல் இருப்பது நல்லது, இல்லையெனில் வேண்டிய பதத்தில் அல்லாமல் நீர்த்து போகும் அபாயம் உண்டு. இந்த பேஸ்பாக்கினை, முகப்பருக்கள் மற்றும் தழும்புகளின் மீது பூசி 15 நிமிடங்கள் ஊரவிடவேண்டும். பின் வெதுவெதுப்பான நீரினால் சுத்தம் செய்யதால் மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.

தழும்புகள் மறைய உருளைக்கிழங்கு தீர்வு (Raw potato for scar marks)

வீட்டில் மிகச் சுலபமாக இருக்கக் கூடிய பொருட்களில் உருளைக்கிழங்கும் ஒன்று, ஏனெனில் இது பலதரப்பட்ட சமையலிலும் முக்கிய பொருளாக உபயோகப்படுகிறது.

இதில் நீங்கள் அறியாத விஷயம் என்னவெனில், உருளைக்கிழங்கினை பச்சையாக உபயோகப்படுத்தி, முகப்பரு வடுக்கள், தழும்புகள் மற்றும் கரும் புள்ளிகளை பூரணமாக மாயமாகச் செய்யமுடியும். இதற்காக உருளைகிழங்கினை தோல் சீவி, வட்டமான மெல்லிய சீவல்களாக அறிந்து கொள்ள வேண்டும்.
இந்த சீவல்களை எடுத்து, முகத்தின் உள்ள முகப்பரு தழும்புகள், கறைகளின் மீது மெல்ல தேய்க்க வேண்டும். தோல் சீவிய உருளைக்கிழங்கினை மசித்து கூழ் போல செய்து, அதனையும் முகப்பரு மற்றும் தழும்புகள் மீது பூசி உபயோகப்படுத்தலாம்.

இதனை 15 – 20 நிமிடங்கள் ஊரவிட்டு, பின்னர் வெதுவெதுப்பான நீரினால் சுத்தம் செய்ய வேண்டும். இப்படி தினசரி செய்து வந்தால் முகத்தின் பொலிவு கூடி, நீங்களே மாற்றத்தைக் காண்பீர்கள்.

பாதாம் எண்ணை சிகிச்சை (Almond oil therapy)

இயற்கையான எண்ணை வகைகள் நம் பலதரப்பட்ட சரும பாதுகாப்பிற்கு மிக அவசியம். பாதாம் எண்ணை சிகிச்சையினால் முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளிலிருந்து விடுபடலாம். ஒரு தேக்கரண்டி பாதாம் எண்ணையுடன் ஒரு தேக்கரண்டி தேனினைக் நன்றாகக் கலந்து, பின் அதில் சில துளிகள் எலுமிச்சை ரசத்தினை கலந்து, நுனி விரலால் முகப்பருக்கள் மற்றும் தழும்புகள் மேல் பூசி, சிறிது நேரம் கழித்து சுத்தமான நீரினால் கழுவி விட வேண்டும்.

முகப்பரு மற்றும் தழும்புகள் மறைய தக்காளி (Tomatoes for acne and scar)
எண்ணை வழியும் முகத்தின் முக்கப்பருவினை நீக்குவது எப்படி

முகப்பரு மற்றும் தழும்புகளை அகற்ற, ஒரு மிகச்சிறந்த வழி, தக்காளி என்பது மிகச்சிலருக்கு தெரிந்த விஷயம்.  அரை கப் மசித்து குழம்பாக்கிய தக்காளியுடன் அரை கப் வெண்ணை பழம் (avocado) கலந்து, இதனுடன் சிறிது தேன் கலந்து, முகத்தில் பூச வேண்டும்.  15 நிமிடம் கழித்து நீரினால் சுத்தம் செய்ய வேண்டும். இது மிகச்சிறந்த பலனை தந்திடும்.

உயிர்ச்சத்து E (Vitamin E capsule)

உயிர்ச்சத்து எனப்படும் வைட்டமின் ஈ காப்ஸ்யுல்ஸ், உங்கள் மருந்து பெட்டகத்தில் கண்டிப்பாக இருக்கக் கூடிய ஒன்று. அதிலிருந்து ஒன்றினை உங்கள் முகப்பரு மற்றும் தழும்புகள், வடுக்களை அகற்ற நீங்கள் உபயோகப்படுத்தலாம். அதற்கு முன் கொதிக்கும் நீராவியில் உங்கள் முகத்தை காட்டி சுத்தப்படுத்தி, முகத்துவாரங்களை திறக்கச் செய்ய வேண்டும். அதன்பின் விட்டமின் ஈ மாதிரியை திறந்து அதில் உள்ளவற்றை கையில் எடுத்து முகப்பரு மற்றும் தழும்புகள் மீது பூச வேண்டும். பூசும்போதே மெல்ல முகத்தினை தேய்த்து கொடுக்க வேண்டும் (massage) இருபது நிமிடங்கள் காத்திருந்தபின் தண்ணீரினால் சுத்தம் செய்திட வேண்டும். இது கண்டிப்பாக மிகச்சிறந்த பலனை கொடுக்கும். இரண்டு தினங்களுக்கு ஒரு முறை செய்துவந்தால் அற்புதமான மாற்றத்தை நீங்களே காண்பீர்கள். இதனை உங்கள் தோழிகளுக்கும் பகிர்ந்துரைக்கலாம்.