Mugappolivu kurippugal – முகம் பளபளக்கவும் பொலிவடையவும் சில குறிப்புகள்

முகம் பொலிவுடனும் புத்துணர்ச்சியுடனும் இந்தால், நீங்களும் அழகாகத் தோற்றம் அளிப்பீர்கள். நமது சமையலறைப் பொருட்களைக் கொண்டே அழகான பொலிவைப் பெற முடியும். எளிதான ஆனால் தரமான அழகுக் குறிப்புகள் இதோ உங்களுக்காக.

மஞ்சள், பால் (Turmeric and milk)

1 டீஸ்பூன் மஞ்சள் தூளுடன், 4 டேபிள்ஸ்பூன் கொண்டைக்கடலை மாவைக் கலக்கவும். இதனுடன் தேவையான அளவு முழு கொழுப்புள்ள பால் சேர்த்து, கெட்டியாகக் கலக்கிக் கொள்ளவும். முகத்தை வெந்நீர் கொண்டு கழுவிய பின், இந்தக் கலவயை நன்கு பூசி, காய்ந்ததும் குளிர் நீரில் முகத்தைக் கழுவவும். வாரத்தில் இரண்டு முறை செய்யலாம்.

தேங்காய் எண்ணெய் (Coconut oil)

2-3 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெயை அடுப்பிலோ ஓவனிலோ வைத்து, சில நொடிகள் விடவும். இந்த வெதுவெதுப்பான எண்ணெயை முகத்தில் சக்கர வடிவில் தேய்க்கவும். முகத்தைக் கழுவிய பிறகே இதனைச் செய்ய வேண்டும். இரவு உறங்கும் முன் பூசி, காலை எழுந்தவுடன் கழுவினால், நாள் முழுதும் பொலிவுடன் இருக்கலாம். இதனை தினமும் கூடச் செய்யலாம்.

தேங்காய் எண்ணெயை சக்கரையுடன் கலந்து, முகத்தில் தடவி, காய்ந்தவுடன் தேய்த்து எடுத்தால், இறந்த செல்களை நீக்கும்.

தேன், பேக்கிங் சோடா, ஆலிவ் எண்ணெய் (Honey, baking soda and olive oil)

ஒரு கிண்ணத்தில் 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா, ½ டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் எடுத்துக் கொள்ளவும். முகத்தை வெந்நீர் கொண்டு கழுவிய பின், முகத்தைத் துடைக்காமலே இந்தக் கலவயை கடிகார சுழற்சிப் பக்கம், சக்கர வடிவில் தேய்க்கவும். 15-20 நிமிடங்கள் கழித்து, குளிர் நீரில் முகம் கழுவவும்.

குங்குமப் பூ (Saffron)

ஒரு சில குங்குமப் பூவுடன், 1 டேபிள்ஸ்பூன் தேன் கலந்து, முகத்தில் பூசவும். 10 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவவும்.

ஆலிவ் எண்ணெய் (Olive oil)

சில துளி ஆலிவ் எண்ணெயை முகத்தில் சக்கர வடிவில் தேய்த்துக் கொள்ளவும். சில நிமிடங்கள் கழித்து, ஒரு பருத்தித் துணியை வெதுவெதுப்பான நீரில் முக்கி, தண்ணீரைப் பிழியவும். இந்தத் துண்டைக் கொண்டு முகத்தில் மெதுவாக ஒத்தி எடுக்கவும். இப்படி தினமும் இரவு செய்யவும்.

கற்றாழை (Aloe vera)

கற்றாழை சதையுடன், சிறிது பால் மற்றும் தேன் சேர்க்கவும். இதனை முகத்தில் தடவி, 20 நிமிடங்கள் கழித்து குளிர் நீரில் கழுவவும். இதை தினமும் செய்யவும்.

பேக்கிங் சோடா (Baking soda)

பேக்கிங் சோடாவுடன் வெதுவெதுப்பான நீரையோ அல்லது ஆலிவ் எண்ணெயைக் கலக்கவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி, 10-15 நிமிடங்கள் காய விடவும். காய்ந்ததும், சக்கர வடிவில் மெல்லிய அழுத்தம் கொடுத்து தேய்க்கவும். இப்படி வாரத்தில் ஒரு முறை செய்யவும்.

பால் (Milk)

பாலுடன் தேவையான அளவு கடலை மாவு சேர்த்து கலக்கவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி காய்ந்ததும், வெந்நீரில் கழுவவும். இப்படிச் செய்து வர முகத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கி, முகம் பளபளக்கும்.

முகம் இயற்கையான பொலிவைப் பெற சில வழிமுறைகள் (Home remedies for skin to glow and shine naturally)

இன்றைய மாசு மிகுந்த சூழலில், முகம் அதன் பொலிவை இழப்பது சாதாரண விஷயம். இதைத் தடுக்க, வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு சில குறிப்புகள்.

  • பப்பாளிச் சாற்றில், சிறிது பால் மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்து, முகத்தில் பூசி, சிறிது நேரம் கழித்து, வெந்நீரில் கழுவவும். வாரத்தில் இரண்டு முறை இதைச் செய்ய, முகம் பொலிவுறும்.
  • இரவு உறங்கச் செல்லும் முன், சிறிதளவு கிளிசரீன், பன்னீர் மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்து பூசி வர, முகம் பளபளப்பைப் பெறும்.
  • வெள்ளரிச் சாற்றை எலுமிச்சை மற்றும் ஆப்பிள் சாற்றுடன் கலந்து முகத்தில் பூச, முகக் கருமை, தழும்புகள் நீங்கி, முகம் பொலிவுறும்.
  • திராட்சைப் பழத்தை, முகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் படருமாறு தேய்த்து வந்தால், இறந்த செல்களை அகற்றி, முகத்திற்கு இயற்கையான பொலிவைத் தரும்.
  • ஆரஞ்சுப் பழத்தை, சிறிது சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். இந்தச் சாற்றை ஆறிய பின், முகத்தில் பூசி வர, முகம் ஜொலிப்படையும்.
  • உருளைக்கிழங்குத் துண்டுகளை, நேரடியாக முகத்தில் தேய்த்து வர, தழும்புகள் மறைந்து, பொலிவான சருமத்தைப் பெற முடியும்.
  • தக்காளிச் சாற்றையும், முகத்தில் நேரடியாகப் பூசலாம். இதனுடன் தேன் மற்றும் பால் கலந்து பூச, முகம் அதிக பொலிவைப் பெறுவதுடன், சிகப்பழகையும் பெற உதவும்.
  • ஆப்ரிகாட் பழத்தை, தேன் மற்றும் தயிருடன் கலந்து, முகம் மற்றும் கழுத்தில் பூசி வர, மூப்புத் தன்மை குறைந்து, முகம் இளமையாகக் காட்சி தரும்.
  • அரிசி மாவுடன், பாலாடையைக் கலந்து பூசி வர, முகம் கவர்ச்சியான பொலிவைப் பெறும்.
  • முட்டை வெள்ளைக் கருவுடன் பாலாடையைக் கலந்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் பூசினால், இறந்த செல்களை நீக்கி, இயற்கையான பொலிவைத் தரும்.
  • ஓட்ஸ், முட்டை வெள்ளைக் கரு, தேன் மற்றும் பாலாடையைக் கலந்து, கெட்டியான கலவையாக்கவும். இது மிகவும் சக்தி வாய்ந்த, உடனடி பலனைத் தரக் கூடிய கலவையாகும். வாரத்தில் இரண்டு முறை இதைச் செய்ய, முகம் அதிக அளவு பொலிவும், அழகும் பெறும்.
  • மஞ்சள் தூளுடன், பாலாடை மற்றும் ஆலிவ் எண்ணெயை சேர்த்து கலக்கவும். இந்தக் கலவையை முகம், கழுத்துப் பகுதிகளில் தடவி, காய்ந்ததும் கழுவி வர, முகம் சுருக்கங்கள் நீங்கி, பொலிவு பெறும்.

மாய்ஸ்சரைசுடன், சுத்தம் மற்றும் டோனிங் (Clean, tone in addition to moisturize)

தூய்மையான பருத்திப் பஞ்சினால், துளசித் தண்ணீரை முகத்தில் அழுத்தி சுத்தம் செய்ய, முகம் அதிக பொலிவையும், ஆரோக்கியத்தையும் பெறும்.

எலுமிச்சைச் சாறு (lime juice to be a rinse)

எலுமிச்சைச் சாற்றுடன் சிறிது பாதாம் எண்ணெயைச் சேர்த்து, முகம் கழுவி வர, முகம் பளபளப்பாகும். எலுமிச்சம் பழத்தின் காய்ந்த தோலை, மாற்றாக உபயோகிக்கலாம்.

கடலை மாவு (Gram flour to get face glow)

கடலை மாவு 1 டீஸ்பூன், 2 டீஸ்பூன் தயிர் கலந்து, முகத்தில் பூசவும். 30 நிமிடங்கள் கழித்து, காய்ந்ததும், பனிக்கட்டியைக் கொண்டு, முகத்தை சுத்தம் செய்ய, முகக் கருமை நீங்கி, உடனடிப் பொலிவைப் பெறலாம்.

முகப் பொலிவு பெற தக்காளி (Tomato to glow your face)

தக்காளியுடன், 2-3 பல் பூண்டை சேர்த்து அரைத்து, முகத்தில் பூசி, 15-20 நிமிடங்கள் கழித்து பனிக்கட்டியைக் கொண்டு கழுவவும். தக்காளியுடன் தயிரையும் சேர்க்கலாம்.

வெள்ளரி (Cucumber)

வெள்ளரிச் சாற்றுடன், பால் கலந்து 20-30 நிமிடங்கள் காய விட்டு, நீரினைக் கொண்டு கழுவி வர, முகம் பளபளப்பைப் பெறும்.

வெள்ளரிச் சாற்றுடன் சிறிதளவு எலுமிச்சைச் சாற்றைக் கலக்கவும். இதை முகத்தில் பூசி, 10-15 நிமிடங்கள் கழித்து, குளிர் நீரில் கழுவ வேண்டும்.

பளபளப்பிற்கான குறிப்பு (Face packs to make skin glow)

முலாம்பழம், பூசணிக்காய், வெள்ளரி, தர்பூசணி, இவற்றுடன் சிறிது பாலாடையைக் கலந்து, முகம் மற்றும் கழுத்தில் பூசவும். 1 மணி நேரம் காய விட்டு, பின் குளிர் நீரில் கழுவவும். சருமத்தின் வறட்சியைப் போக்கி, பொலிவுடன் இருக்கும்.

தேன், எலுமிச்சை (Lemon and honey)

சிறிது எலுமிச்சைச் சாற்றுடன், தேன் சேர்த்துக் கலக்கவும். தேன் முழுவதும் கலங்கியவுடன், முகத்தைக் கழுவி, கலவையை நன்கு பூசவும். 15-20 நிமிடங்கள் காய விட்டு, முகத்தைக் குளிர் நீர் கொண்டு, சுத்தம் செய்யவும்.

தயிர் (Ways to get glowing, smooth skin with yogurt)

தயிருடன், ஒரு எலுமிச்சையின் சாற்றைப் பிழியவும். இதனுடன் சிறிது தேன் சேர்த்து, முகத்தில் பூசவும். காய்ந்தவுடன், முகத்தைக் குளிர் நீர் கொண்டு கழுவவும்.

ஓட்ஸ் (Oats can improve the skin texture and shine face)

ஓட்ஸுடன், சிறிதளவு வெந்நீர் சேர்க்கவும். 5 நிமிடங்கள் கழித்து, கெட்டியான கலவையை முகத்தில் நன்கு படர விடவும். பின்பு, சக்கர வடிவில் மெதுவாகத் தேய்க்கவும். மூக்குப் பகுதிகளில் அழுத்தித் தேய்க்க, கரும்புள்ளிகளை அகற்றும். 10-15 நிமிடங்கள் இதைச் செய்த பின், முகத்தைக் குளிர் நீர் கொண்டு கழுவவும்.

பனிக்கட்டியின் மாயம் (The magic of ice for face glow)

முகத்தை பனிக்கட்டியைக் கொண்டு தேய்க்க, முகத்தில் இரத்த ஓட்டம் அதிகமாகி, முகம் சிகப்பழகைப் பெறும். மேக்கப் செய்யும் முன் இப்படிச் செய்ய, அதிக நேரம் மேக்கப் கலையாமல் இருக்கும். பனிக்கட்டியுடன் சிறிது மாய்ஸ்சரைசரைத் தொட்டும் தடவலாம்.

பப்பாளி, தேன் (Papaya & honey for face glow)

பப்பாளிச் சாற்றுடன் சிறிது தேன் கலந்து, முகம் மற்றும் கழுத்தில் பூசி வர, முகம் மிருதுவாக இருக்கும்.

சந்தனம் (Natural glowing skin with sandalwood mask)

1 டீஸ்பூன் சந்தனப் பொடியுடன், சில சொட்டு பன்னீரைச் சேர்க்கவும். இந்தக் கலவையை முகத்தில் தடவி, 10 நிமிடங்கள் கழித்து குளிர் நீரில் கழுவவும்.

தேன், தயிர் (Fair skin with yogurt and honey)

2 டேபிள்ஸ்பூன் தயிருடன், 1 டேபிள்ஸ்பூன் தேன் கலக்கவும். இந்தக் கலவையை முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் காய விடவும். காய்ந்ததும், நீரினால் முகத்தை சுத்தம் செய்யவும்.

இதே போன்று, 1 டேபிள்ஸ்பூன் தேனுடன், 2 டேபிள்ஸ்பூன் பால், 1 டேபிள்ஸ்பூன் கடலை மாவு கலந்து, முகத்தில் பூசவும். காய்ந்தவுடன் நீரினால் கழுவவும்.

கொண்டைக் கடலை மாவு (Best Ayurveda pack with chickpea our)

2 டீஸ்பூன் கொண்டைக் கடலை மாவு, சந்தனப் பொடி, ½ டீஸ்பூன் மஞ்சள் பொடி, சிறிது பச்சைக் கற்பூரம். இவற்றை, பன்னீர் அல்லது தண்ணீர் கொண்டு நன்கு கலக்கவும். இதனை முகத்தில் பூசி, 20 நிமிடங்கள் விட்டு, குளிர் நீரில் கழுவவும்.