MUGATHIRKANA KATTRALAI PACK – முகத்திற்கான கற்றாழை பூச்சு

கற்றாழையின் அதிசயம் என்னவென்றால் அதன் சதைப்பற்றுள்ள இலைகளில்தான் உள்ளது. கற்றாழையின் இலைகளில் உள்ள ஜெல் பாலிசாக்கரைடுகள், லெக்டின்கள் மற்றும் மான்னன்ஸ் போன்ற நன்மை நிறைந்த பொருட்கள் உள்ளன. இதில் தாதுக்கள், வைட்டமின்கள் போன்ற பொருட்கள் நிரம்பியுள்ளன.

முகத்தில் ஏற்படும் பிரச்சனையைத் தீர்ப்பதில் கற்றாழை இயற்கையாகவே அடிப்படை தன்மையைக் கொண்டுள்ளன. இதை எந்தவொரு வடிவத்திலும் பயன்படுத்தப்படுத்தலாம் என்ற நம்பிக்கையில், சந்தைகளில் அழகு சாதனப்பொருளாக விற்பனை செய்கின்றனர்.

தோல் பராமரிப்புக்கான கற்றாழையின் நன்மைகள் (Benefits of aloe vera for sking care)

இது தோலுக்கான ஒரு பெரிய மாய்ஸ்சரைசர் என சொல்லலாம். கற்றாழை ஜெல் தோலுக்கு புத்துயிர் அளிக்கிறது, இதில் ஹைட்ரேட்டுகள் உள்ளன. இது உங்கள் சருமத்தை எல்லா நேரங்களிலும் புதியதாக வைக்க உதவுகிறது.

கற்றாழை ஜெல் எதிர்ப்பு நுண்ணுயிர் பண்புகளை அதிகம் கொண்டுள்ளதால் முகப்பருக்கள் வராமல் சமாளிக்க கூடிய தன்மை கொண்டுள்ளது,

இது பொதுவாக ஒரு பெரிய எதிர்ப்பு ஆக்ஸிஜனேற்றியாகும்.

இது சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை நீக்கி சருமத்தை பாதுகாக்கிறது.

கற்றாழை ஜெல் உடம்பில் ஏற்படும் வலி மற்றும் தொற்றுநோயைக் குறைப்பது மற்றும் சூரிய ஒளிக்கதிர்கள், பூச்சிகள், அரிப்பு, தோலழற்சிகள், மற்றும் நாட்பட்ட காயங்கள் ஆகியவற்றிற்கு சிகிச்சையளிக்க ஒரு நல்ல மருத்துவ பயனாக உள்ளது.

கற்றாழையின் பேஸ் பேக் மற்றும் பேஸ் மாஸ்க் (Aloe vera face packs and masks for skin)

கற்றாழை மற்றும் பன்னீர் (Aloe vera with rose water)

உங்கள் தோல் மற்றும் சரும பிரச்சனைகளை அகற்றுவதில் கற்றாழை மற்றும் பன்னீர் பெரும் பங்கு வகிக்கிறது. மேலும் இதன் நன்மையானது முகத்தில் ஏற்படும் தழும்பு மற்றும் முகப்பரு போன்றவற்றை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கிறது. இத்துடன் பன்னீர் சேர்த்து முகத்தில் தடவினால் முகம் பளபளப்பாகும். இயற்கை பொலிவுடனும் காணப்படும்.

கற்றாழை மற்றும் மஞ்சள் (Aloe vera and turmeric)

கற்றாழை மற்றும் மஞ்சள் இந்த மஞ்சளானது ஆன்டிசெப்டிக் மற்றும் ஆன்டிமைக்குரோபல் அதிகம் கொண்டுள்ளதால் அதிக நன்மைகளைத் தருகிறது. கற்றாழை மற்றும் மஞ்சள் இவற்றைக் கலந்து முகம் கழுத்து பகுதிகளில் தடவினால் கருமைகள் நீங்கும் இதனுடன் ஒரு சிட்டிகை அளவு எலுமிச்சையைச் சேர்த்து முகத்தில் தடவினால் கரும்புள்ளிகள் மறையும். எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது முகத்தில் தோன்றும் எண்ணெய் வடிதல் இவற்றைக் கட்டுப்படுத்துகிறது. இது மேலும் சூரியனிடமிருந்து நம்மை பாதுகாக்கிறது.

கற்றாழை மற்றும் வாழைப்பழம் பேஸ் பேக் (Aloe vera and bananas face pack)

கற்றாழை மற்றும் வாழைப்பழங்களை எடுத்துக்கொண்டு ஒரு பசை போன்ற கலவையைச் செய்து முகத்தில் தடவி வந்தால் தோல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் இருக்கும். இதில் ஹைட்ரேட் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் இது முகத்திற்கு நல்ல பலன்களைத் தருகிறது. தோலில் ஏற்படும் சுருக்கங்களைக் கட்டுப்படுத்துகிறது. இது தோல் வறண்ட மற்றும் உலர்ந்த சருமத்திற்கு மிகவும் ஏற்றது. கற்றாழை, வாழைப்பழம் இவற்றுடன் தேன் அல்லது பால் சேர்த்து முகத்தில் தடவினால் இன்னும் முகத்திற்கு மென்மையைத் தரும்.

தயிர் மற்றும் கற்றாழை (Curd and aloe vera)

தயிர் மற்றும் கற்றாழை இதனை கொண்டு ஃபேஸ் பேக் போடும்போது முகம் பளபளப்பாகும் மிருதுவாகவும் இருக்கும். இந்தத் தயிரானது முகத்தில் ஏற்படும் வறட்சியை நீக்குகிறது. இதில் அதிக ஹைட்ரேட்டுகள் இருப்பதால் ஈரப்பதத்துடன் காணப்படும் இதனால் முகம் வறண்டு போகாமல் இருக்கும்.

கற்றாழை மற்றும் வெள்ளரிக்காய் பேஸ் பேக் (Aloe vera and cucumber face pack)

சூரியனிடம் இருந்து வரும் கதிர்களால் நம் தோல் வறண்டு போகின்றன. இதனைத் தடுக்க இந்த பேஸ் பேக் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வெள்ளரிக்காயில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனை முகத்தில் தடவினால் எண்ணெய், அழுக்கு, தூசி இவற்றை நீக்கி மென்மையான மற்றும் மிருதுவான சருமத்தை நமக்குத் தருகிறது. மேலும் கற்றாழை சேர்த்து முகத்தில் தடவும் போது முகம் அழகான தோற்றத்தைத் தருகிறது. இது கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றது.

பழுப்பு நீக்குவதற்கு கற்றாழை ஃபேஸ் பேக்கின் பயன்பாடுகள் (Aloe vera face pack for tan removal)

தேவையான பொருட்கள்

கற்றாழை மற்றும் எலுமிச்சைச் சாறு

செய்முறை

இந்தக் கற்றாழை ஜெல் மற்றும் எலுமிச்சைச் சாறு இவற்றுடன் அரை பின்ச் மஞ்சள் சேர்த்து முகத்தில் தடவி 10 நிமிடம் விட்டு பின்பு முகத்தைக் கழுவவும். இவ்வாறு செய்து வந்தால் முகப்பருக்கள் மறைந்து போகும். இந்த ஃபேஸ் பேக் மிகவும் சிறந்தது.

சிறந்த சருமத்திற்கு கற்றாழை பேஸ் பேக் (Aloe vera face mask for excellent skin)

தேவையான பொருட்கள்

கற்றாழை, மஞ்சள்,தேன், பால் மற்றும் பன்னீர்

செய்முறை

மஞ்சள் ஒரு டீஸ்பூன், தேன் ஒரு டீஸ்பூன், பால் ஒரு டீஸ்பூன் மற்றும் சிறிதளவு பன்னீர் ஆகியவற்றைக் கொண்டு ஒரு பின்ச் கற்றாழை ஜெல் சேர்த்து முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் முகப்பரு மற்றும் வறண்ட தோல் போன்றவை அகலும். மேலும் முகம் பளப்பளப்பாகவும் மென்மையாகவும் இருக்கும்.

கற்றாழை பேஸ் மாஸ்க் (Aloe vera detox – face mask)

தேவையான பொருட்கள்

கற்றாழை, மாம்பழம், எலுமிச்சைச் சாறு

செய்முறை

கற்றாழை 2 டீஸ்பூன் மாம்பழம் ஒரு டீஸ்பூன் இவை இரண்டும் சேர்த்து, ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாற்றையும் சேர்த்து பேஸ்ட் செய்து முகம் மற்றும் உடல்களில் பூசி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இவற்றைதப் போட்டுவிட்டு 10-15 நிமிடங்கள் கழித்து குளிக்கவும். இப்படி செய்து வந்தால் உங்களுக்கு புத்துணர்வு கிடைக்கும்.

எண்ணைய் சருமத்திற்கான பேஸ் பேக் (Aloe vera face pack for oily skin and also acne inclined skin)

தேவையான பொருட்கள்

கற்றாழை இலை, தேன்

செய்முறை

சிறிதளவு தண்ணீரில் கற்றாழை இலைகளை கொதிக்க வைத்து பின்பு அந்தத் தண்ணீரை எடுத்து ஒரு டீஸ்பூன் அளவு தேன் கலந்து ஒரு பசை போன்ற அமைப்பில் கொண்டு வரவும். இதை முகத்தில் போட்டு விட்டு 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இதனால் முகப்பருவில் இருந்து விடுவித்து நல்ல பலனை தரும்.

உலர் சருமத்திற்கான கற்றாழை பேஸ் பேக் (Aloe vera face pack for dry skin)

தேவையான பொருட்கள்

கற்றாழை, வெண்ணெய், பேரீச்சை, வெள்ளரிக்காய், மற்றும் எலுமிச்சைச் சாறு

செய்முறை

ஒரு டீஸ்பூன் கற்றாழை ஜெல், ஒரு டீஸ்பூன் வெண்ணெய் ஒரு டீஸ்பூன் பேரீச்சை விதை, ஒரு டீஸ்பூன் வெள்ளரிச் சாறு மற்றும் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு இவற்றை எடுத்து பாத்திரத்தில் மென்மையான பேஸ்ட் போல் கலந்து கொள்ளவும். இந்தப் பசையை முகத்தில்தடவி, இருபது நிமிடங்கள் உலர்ந்த பின்பு குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவிவிடவும். இந்த பேக் உங்கள் முகத்தை பளபளப்பாக வைக்க உதவுகிறது.

பலகீன சருமத்திற்கான கற்றாழை பயன்பாடு (Aloe vera face mask for vulnerable skin)

தேவையான பொருட்கள்

கற்றாழை, வெள்ளரிக்காய் சாறு, தயிர், மல்லிகை எண்ணெய்

செய்முறை

சிறிதளவு கற்றாழை, வெள்ளரிக்காய் சாறு சிறிதளவு மற்றும் தயிர் சேர்த்து சில துளி மல்லிகை எண்ணெயைச் சேர்த்து பேஸ்ட் போல் செய்து கொள்ளவும். இதை முகத்தில் தடவி 10-15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழிவி வந்தால் முகத்தில் ஏற்படும் அழுக்கு மற்றும் அசுத்தங்களை நீக்கி விடும். இது உங்கள் முகத்தை பளபளப்பாகவும் செய்யும்.

சருமத்திற்கு ஆற்றல் தரும் கற்றாழை (Aloe vera face scrub for energized skin)

தேவையான பொருட்கள்

கற்றாழை, வெள்ளரிக்காய் மற்றும் ஓட்ஸ்

செய்முறை

ஒரு சில வெள்ளரித் துண்டுகள் மற்றும் மென்மையான கற்றாழை ஜெல் கலவையில் ஓட்ஸ் சேர்க்கவும், சிறிதளவு உப்பு சேர்த்து உங்கள் முகம் மற்றும் கழுத்தில் மசாஜ் செய்து 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

கற்றாழை பேஸ் மாஸ்க் உலர் சருமத்திற்கு (Aloe vera face mask for dry & mix skin)

தேவையான பொருட்கள்

கற்றாழை, ஆலிவ் எண்ணெய், வெண்ணெய்

செய்முறை

கற்றாழை ஜெல், தேங்காய் எண்ணெய் மற்றும் சிறிதளவு வெண்ணெய் இந்த மூன்றையும் முகத்தில் தடவி 15 நிமிடம் வரை வைத்து பின்பு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இது போன்று செய்தால் முகத்தில் உள்ள தோலுக்கு ஈரப்பதத்தை அளிப்பதோடு சருமத்திற்கு மென்மையைத் தருகிறது.

சுருக்கத்திற்கான பேஸ் மாஸ்க் (Aloe vera face mask for wrinkles & dry skin)

தேவையான பொருட்கள்

கற்றாழை, பாதாம்

செய்முறை

கற்றாழை ஜெல் மற்றும் பாதாம் பருப்புகளைக் கொண்டு பேஸ்ட் செய்யவும் பின்பு முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் 15 நிமிடம் தடவி பின்பு கழுவவும். இது முகத்திற்கு நல்ல பொலிவைத் தருகிறது. சிறு முகப்பருக்களை அகற்றவும் உதவுகிறது.

சரும இறுக்கத்திற்கான மாஸ்க் (Aloe vera mask for tightening of the skin)

தேவையான பொருட்கள்

கற்றாழை ஜெல் மற்றும் முட்டை

செய்முறை

சிறிதளவு கற்றாழை மற்றும் ஒரு டீஸ்பூன் முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்து அதில் இரண்டு டீஸ்பூன் எலுமிச்சைச் சாற்றை எடுத்துக் கொள்ளவும் இந்தக் கலவையை நன்கு கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் பேஸ் பேக் போட்டுக் கொண்டு 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீர் அல்லது வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். இது முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கவல்லது. இதில் வைட்டமின்கள் அதிகம் உள்ளதால் முகத்திற்கு பொலிவைத் தரும்.

ஆரோக்கியத் தோற்றத்திற்கான பேஸ் பேக் (Face pack for a healthy looking skin)

தேவையான பொருட்கள்

கற்றாழை ஜெல் மற்றும் பப்பாளி

செய்முறை

சிறு துண்டு பப்பாளி பழமும் மற்றும் இரண்டு டீஸ்பூன் அளவு கற்றாழை ஜெல் இரண்டையும் நன்கு கலந்து ஒரு பசை போன்று செய்து முகத்தில் மசாஜ் செய்யவும் 20 நிமிடம் கழித்து குளிர்ந்த தண்ணீரில் கழுவவும். பப்பாளியிலுள்ள விட்டமின்கள் முகத்தை நன்கு பளபளப்பாகவும் மிருதுவாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது. இது முகத்தை மேலும் பொலிவாக்கும் தன்மையைக் கொண்டுள்ளது.

ஒரு சிறந்த முகப்பொலிவைப் பெறுவதற்கு இந்த கற்றாழை ஜெல்லை தொடர்ந்து பயன்படுத்துங்கள்.

அழகைக் கூட்ட கற்றாழை (Aloe vera adds fairness to your skin)

தேவையான பொருட்கள்

மஞ்சள் கலந்த கற்றாழை சாறு மற்றும் பால் கிரீம்

செய்முறை

2டீஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் ஒரு டீஸ்பூன் பால் கிரீம், சிறிதளவு மஞ்சள் எடுத்து முகத்தில் ஃபேஸ் பேக் போட்டு 30 நிமிடங்கள் வரை வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவவும். பால் மற்றும் மஞ்சள் மருத்துவ குணம் வாய்ந்தது .இவற்றுடன் கற்றாழை ஜெல் முகத்தில் தடவி வந்தால் நிச்சயமாக ஒரு நல்ல பலன் கிடைக்கும்.

சருமத்தைத் தூய்மையாக்க (Aloe vera scrub for squeaky clean skin)

தேவையான பொருட்கள்

பிரவுன் சுகர் மற்றும் கற்றாழை ஜெல்

செய்முறை

கற்றாழை ஜெல் மற்றும் பிரவுன் சுகர் இவ்விரண்டையும் எடுத்து பசை போல செய்து முகத்தின் மேல் ஸ்கர்ப் போன்று தேய்க்கவும். இது உங்கள் முகத்தில் உள்ள முகப்பருக்களை எளிதில் நீக்க வல்லது. இதில் தண்ணீர் கலக்காமல் வெறும் கற்றாழை ஜெல்லை மட்டும் எடுத்து பிறகு பிரவுன் சுகர் சேர்த்து முகத்தில் தினமும் தேய்த்து வந்தால் முகத்தில் உள்ள எண்ணெய் வடிதல் மற்றும் முகப்பருக்கள் அனைத்தையும் நீக்கிவிடும். இதில் உள்ள அதிசயம் என்னவென்றால் முகத்தில் உள்ள வயதான தோற்றத்தை மாற்றி புதுப் பொலிவைத் தரும்.

கற்றாழை பேஸ் பேக் நன்மைகள் (Benefits of aloe vera face pack)

  • இது ஒரு அற்புதமான தோல் மாய்ஸ்சரைசர்.
  • இயற்கையாகவே தோல் சுத்திகரிப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.
  • பூஞ்சை எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பியாக கருதப்படுகிறது.
  • கற்றாழை ஜெல் தோல் தடித்தல், சிவத்தல், எரிச்சல், முதலியனவற்றைக் குறைக்க ஒரு களிம்பாக பயன்படுத்தப்படுகிறது.