WAXING PARUKKALAI POKUTHAL – வேக்ஸிங் செய்தபின் வரும் பருக்கள் மற்றும் மருக்களை தடுப்பது எப்படி?

வேக்ஸிங் செய்த பிறகு மிக வழுவழுப்பான மென்மையான சருமத்தைத்தான் ஒவ்வொரு பெண்ணும் விரும்பவாள் ஆனால் வேக்ஸிங் செய்தி பிறகு சருமத்தில் வரும் மருக்கள் மற்றும் பருக்கள் மென்மையான சருமத்தின் அழகைக் கெடுத்துவிடுகிறது. பல காரணங்களால் இத்தகைய மருக்கள் தோன்றலாம் ஆனால் வேக்ஸிங் செய்த பிறகு குறிப்பாக மருக்கள் மற்றும் பருக்கள் வந்தால் அதற்கு முறையான சிகிச்சையை மேற்கொள்வதன் மூலம் தடுக்கலாம்.  வேக்ஸிங் செய்வதற்கான முறையான வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் செய்வதே இத்தகைய பருக்கள் வர முக்கியக் காரணம்.

வேக்ஸிங் பொருளில் உள்ள வேதிப்பொருட்கள் உங்கள் சருமத்திற்கு ஏற்ற வகையிலானதா என்பது முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும், இல்லையெனில் மருக்கள் வர வாய்ப்புகள் அதிகம். சில பேருக்கு எந்த காரணமும் இல்லாமலும் வேக்ஸிங் செய்த பிறகு மருக்கள் வரும் ஏனெனில் அவர்களின் சருமம் மிக  மென்மையானதாக இருக்கும். வேக்ஸிங் செய்த பிறகு மருக்கள் வருவதால் நீங்கள் வேக்ஸிங் செய்வதையே விட்டுவிட வேண்டும் என்பதல்ல. அதற்கு பதில் சரியான முன்னெச்சரிக்க விசயங்களை மேற்கொண்டு வேக்ஸிங்கை நீங்கள் தொடரலாம். இதோ சில குறிப்புகள் மருக்களைத் தடுக்க.

வருமுன் காப்பதே சிறந்தது என்ற அடிப்படையில் மருக்கள் வராமல் காப்பது எப்படி என்பதை முதலில் பார்ப்போம். மிக மென்மையான சருமம் கொண்ட பெண்களுக்கு வேக்ஸிங் செய்வதால் வரும் மருக்களை முழுமையாகத் தடுக்க முடியாது ஆனால் குறைக்க முடியும்.

வெதுவெதுப்பான அழுத்தம் (Use of warm compress)

வேக்ஸிங் செய்த பிறகு மருக்கள் வரும் இடத்தில், சற்று சூடான அட்டையால் அழுத்தம் கொடுக்க வேண்டும். சில நிமிடங்கள் இப்படி கொடுக்கலாம். இதனால் வளர்ச்சி குன்றிய முடிகள் எளிதில் வந்துவிடும்.

பருக்களை தொடாமல் இருத்தல் (Don’t do anything to the pimples)

வேக்ஸிங் செய்த பிறகு அந்த இடத்தில் பருக்கள் மருக்கள் வந்தால் அதை கைகளால் நோண்டக்கூடாது. அப்படி செய்தால்  அதில் மீண்டும் அதிக கிருமிகள் தொற்று ஏற்பட்டு மேலும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும்.

ஆப்பிள் சீடர் வினிகர் (Apple cider vinegar)

வேக்ஸிங் செய்த சருமத்தில் வரும் பருக்களை ஆப்பிள் சீடர் வினிகர் குணப்படுத்தும். இதில் கிருமி எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன.  2 தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகர் ஒரு கிண்ணத்தில் எடுத்து பஞ்சை நனைத்து  பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும். தினமும் சில தடவை இப்படி செய்துவாருங்கள்.

வெள்ளரி (Cucumbers)

வெள்ளரி ஒரு குளிர்ச்சி தரும் காயாகும். ஆகவே, வேக்ஸிங் செய்த பிறகு எரிச்சல், வீக்கம், பருக்கள் இருந்தால் வெள்ளரியை நறுக்கி பின் அரைத்து துணியில் போட்டு பிழிந்து சாறு எடுத்து வேக்ஸிங் செய்த இடத்தில் தடவ வேண்டும். ஒரு நாளைக்கு 2 அல்லது  3 தடவை இப்படி செய்ய வேண்டும்.

பால் (Milk)

பருக்கள் மற்றும் மருக்களை பால் கொண்டு சீராக்கலாம். ஒரு பஞ்சை பாலில் நனைத்து பாதிக்ப்பட்ட சருமத்தில் தடவலாம். 7 நிமிடங்கள் கழித்து சாதாரண நீரினால் கழுவிக் கொள்ளலாம். பாலைத் தடவும் முன் பாதிக்கப்பட்ட இடத்தை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

வாழை (Banana)

வாழைப்பழத்தில் ஆண்டி ஆக்ஸிடென்ட், தாதுப்பொருட்கள் மற்றும் வைட்டமீன் சி உள்ளது. நன்கு பழுத்த வாழைப்பழத்தை நன்கு மசித்து பருக்கள் வந்த இடத்தில் தடவ வேண்டும். 5 நிமிடங்கள் கழித்து கழுவிக் கொள்ளலாம்.

வேக்ஸிங் செய்வதற்கு முன் தயார்படுத்துதல் (Prepare your skin before waxing)

வேக்ஸிங் செய்வதற்கு முன் சருமத்தைத் தயார் செய்வதை நம்மில் பெரும்பாலானவர்கள் செய்வதில்லை. வேக்ஸிங் ஜெல்லைத் தடவுவதற்கு முன்  சருமத்தை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். 10-15 நிமிடங்கள் ஒரு ஐஸ் கட்டை வைத்து சருமத்தில் தடவிக் கொண்டே இருக்க வேண்டும். அதன் பின் வேக்ஸிங் செய்யலாம்.

சரியான முறையில் வேக்ஸிங் செய்தல் (Wax the right way)

வேக்ஸிங்கிற்குப் பின் பருக்கள் மற்றும் மருக்கள் வர முக்கியக் காரணம் சரியான முறையில் முடியை இழுத்து எடுக்காததேயாகும். உணர்வான சருமப் பகுதியில் உள்ள முடியை வேக்ஸிங் செய்யும்போது சரியான இழுக்காமல் இழுத்து முடியின் வேரைத் கிளர்ந்தெழச் செய்யும்போது அதனால் பருக்கள் மற்றும் மருக்கள் வருகின்றன. ஆகவே, வேக்ஸிங் சரியாகச் செய்யத் தெரிந்த ஒருவரை அணுகுங்கள்.

சரியான வேக்ஸ் பயன்படுத்ததல் (Use the right wax)

மிக முக்கியமான ஒரு விசயம் மிகச்சரியான வேக்ஸைப் பயன்படுத்துதல். தற்போது குளிர்ந்தநிலை வேக்ஸ் வந்துள்ளது, இவை நன்றாக வேலை செய்கிறது. இவற்றைப் பயன்படுத்த தயக்கம் இருந்தால் நீங்கள் வீட்டிலேயே குளிர் வேக்ஸ் தயாரிக்கலாம். சில அழகு நிலையங்களில் வீட்டு தயாரிப்பு வேக்ஸ் பயன்படுத்துகிறார்கள்.

வேக்ஸிங்கிற்குப் பின் பராமரிப்பு (After care is essential)

வேக்ஸிங் செய்தபிறகு பருக்கள் மற்றும் மருக்கள் வரும் என்றிருந்தால் நீங்கள் மிக கவனமாக பராமரிக்க வேண்டும். முடிகளை நீக்கிய பிறகு வெதுவெதுப்பான நீரில் நன்கு கழுவ வேண்டும். பலதடவை நீரினால் கழுவிய பிறகு ஐஸ் கட்டி கொண்டு தடவ வேண்டும்.

ஐஸ்கட்டியை ஒரு துணியில் சுற்றி சருமத்தில் தடவ வேண்டும். வேக்ஸிங் செய்தபின் விட்டு விட்டு இப்படி ஐஸ்கட்டி 1 மணி நேரம் வரை வைக்கலாம். பின்னர் கற்றாழை ஜெல் தடவலாம்.

சிவப்ப மருக்கள் (Red bumps after waxing)

வேக்ஸிங்க செய்து முடிகளை நீக்கிய பின் சிவப்பு நிறத்தில் இருக்கும் மருக்கள் என்பது சாதாரண ஒன்று. இது 3 நாட்களில் சரியாகிவிடும்.

வெள்ளை மருக்கள் (White bumps after waxing)

சிவப்பு மருக்கள் அதிகமாக இருந்து அதை வீங்கி பெரிய வெள்ளை பருக்களாக மாறலாம். இவற்றை வீட்டு மருத்துவக் குறிப்புகள் கொண்டு சரியாக்கலாம்.

வேக்ஸிங் செய்யும் முன் முன்னெச்சரிக்கை விசயங்கள் (Precautions to keep in mind before waxing)

  • வேக்ஸிங் செய்த அதே நாளே இறந்த செல்களை நீக்கும் செயலும் செய்யக்கூடாது. உங்களுக்கு மாதவிடாய் இருக்கும் நாட்களில் வேக்ஸிங் செய்யக்கூடாது. அந்த நாட்களில் உடலின் வெப்பநிலை சராசரியை விட அதிகமாக இருக்கும்.  
  • ரெடின் அல்லது அக்குடேன் மருந்து நீங்கள் எடுத்துக் கொண்டிருந்தால் வேக்ஸிங் செய்யக்கூடாது.
  • வேக்ஸிங் உங்களுக்கு செய்யும் நபர் கையுறை அணிந்திருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் மற்றும் மூலிகை வேக்ஸ் பொருட்களா என்றும் பார்த்துக் கொள்ளுங்கள்.
  • வேக்ஸிங் செய்தவதற்கு 1 அல்லது 2 நாட்களுக்கு முன் இறந்த செல்கள் நீக்குதலைச் செய்து கொள்ளுங்கள். இதனால் சருமத்தில் இறந்த செல்கள் இருக்காது வேக்ஸிங் சற்று எளிதாக இருக்கும்.
  • வேக்ஸிங் செய்யும்போது இரத்தம் வழிந்தால் அந்த இடத்தில் ஐஸ்கட்டி வைக்க வேண்டும்.
  • வேக்ஸிங் செய்வதற்கு முன் வெந்நீரில் குளிக்காதீர்கள்.

வேக்ஸிங்க மருக்களுக்கான சிகிச்சை (How to treat waxing bumps)

கழுவுதல் (Rinse off)

முகத்தில் வேக்ஸிங் செய்த பிறகு, நல்ல தரமான க்ளீன்சர் கொண்டு முகத்தைக் கழுவ வேண்டும். சாதாரண சோப்பு பயன்படுத்தக் கூடாது.

ஈரப்பத களிம்பு (Moisturizer)

வேக்ஸிங் செய்த இடத்தில் நல்ல தரமான ஈரப்பத களிம்பு அல்லது லோஷன் தடவலாம்.

ஹஸல் (Hazel)

பஞ்சு குச்சியை ஹஸல் திரவத்தில் நனைத்து வேக்ஸிங் செய்த இடத்தில் தடவலாம். சருமத்தை குளிர்ச்சியாக்கும்.

வேக்ஸிங் மருக்களுக்கான வீட்டு சிகிச்சை (After waxing bumps remedies)

எலுமிச்சைச் சாறு (Lemon juice can help heal bumps)

மருக்கள் மிக தொல்லை தரக்கூடியவை. வேக்ஸிங் செய்த பின் உருவான மருக்கள் அதிக வலியில்லாததாக இருந்தால் எலுமிச்சை சாறு தடவலாம். இதில் வைட்டமீன் சி அதிகம் உள்ளது. மருக்கள் விரைவாக உலரச்செய்ய இது உதவும். செயற்கை எலுமிச்சை சாறு பயன்படுத்தக் கூடாது.

பேபி பவுடர் (Baby powder to prevent bumps)

பேபி பவுடர் சிறு குழந்தைகளுக்காக ப்ரத்யோகமாக தயாரிக்கப்படுபவை. வேக்ஸிங் செய்தபின் வரும் மருக்களைத் தடுக்க சிறிதளவு பேபி பவுடரைத் தடவலாம்.

தேங்காய் எண்ணைய் (Coconut oil for after wax bumps)

நல்ல சுத்தமான தேங்காய் எண்ணையை வேக்ஸிங் செய்த பின் தடவினால் மருக்களைத் தடுக்கலாம்..

கற்றாழை பயன்பாடு (removal of after waxing bumps using aloe vera gel)

பலவகையான சருமப் பிரச்சனைகளைத் தீர்க்கும் ஒரு மருந்தாக கற்றாழை ஜெல் உள்ளது. வேக்ஸிங் செய்த பிறகு சிவப்பாக இருக்கும் சருமம் மற்றும் எரியும் உணர்வை நீக்க கற்றாழை ஜெல் பயன்படுத்தலாம். சருமம் ஈரப்பதமாகவும் இருக்கும் கற்றாழை ஜெல் பயன்படுத்தும்போது. சந்தைகளில் டப்பாக்களில் இருக்கும் ஜெல் வாங்கி பயன்படுத்துவதை விட நேரடியாக கற்றாழைச் செடியிலிருந்து பயன்படுத்தவது சிறந்தது. ஒரு நாளைக்கு 5 தடவை பயன்படுத்தலாம்.

வைட்டமீன் (vitamin E)

வேக்ஸிங் செய்த பிறகு வரும் மருக்கள்,  தோல் சிவப்பாகுதல் மற்றும் அரிப்புகளை வைட்டமீன் சரிசெய்யும். கிருமிகளை அழித்து சருமத்திற்கு மென்மையைக் கொடுககிறது. வேக்ஸிங் செய்தபிறகு வைட்டமீன் எண்ணையை சருமத்தில் தடவ வேண்டும். ஒரு நாளைக்கு 3 தடவை தடவலாம்.

மேலும் சில குறிப்புகள் (More tips to treat bumps after waxing)

  • வேக்ஸிங் செய்த பிறகு மென்மையான முறையில் சருமத்தைக் கழுவ வேண்டும்.
  • சோப்பு பயன்படுத்தி கழுவக் கூடாது.
  • பருத்தித் துணியால் சருமத்தை மூடலாம்.
  • அதிக சூடாக இருக்கும் இடத்தில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
  • வலியைக் குறைக்க இபோப்ரோபென், நேப்ரோக்சன் போன்ற மருந்துகளைப் பயன்படுத்தலாம்.

ஹஷல் எண்ணையைத் தடவலாம்.