Tamil tips to whiten underarms – இருண்ட கவசங்களை வெட்டவும் எப்படி

கருப்பான அக்குள் இருப்பது உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறதா, ஒரே இரவில் கருமையை நீக்க பல இயற்கையான வீட்டு மருத்துவக் குறிப்புகள் உள்ளன.  இன்று பலபேர்களுக்கு அக்குள் கருமையாக மாறி ஒரு வித தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது அதை நிச்சயம் போக்கலாம். கருமையான அக்குள் இருப்பதாலேயே நீங்கள் அணியாமல் வைத்திருக்கும் பல ஆடைகளை இனி நீங்கள் அணியலாம்.

அக்குள் கருமையை நீக்கும் வழிகள் (Ways to get rid of dark armpits)

அமிலத் தன்மை இயற்கையாகவே உள்ள சில பழங்கள் மற்றும் காய்கறிகள் உங்களுக்கு எளிதில் கிடைக்கும். இவற்றைக் கொண்டே எப்படி அக்குள் கருமையை நீக்குவது என்ற குறிப்புகளை நீங்கள் பெறப்போகிறீர்கள். கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சில குறிப்புகள் நல்ல பலனைத் தருபவையாக இருக்கின்றது.

எலுமிச்சை சாறு (Lemon juice therapy for dark armpits)

வைட்டமீன் சி அதிகமுள்ள இந்த சிட்ரஸ் பழம் நிச்சயம் அக்குள் கருமையை நீக்கும் அற்புதமான ஒன்றாகும். கருமையான, வியர்த்து ஒட்டுகின்ற அக்குள் பிரச்சனையை நீக்கி சங்கடத்திலிருந்து வெளிவரலாம்.  எலுமிச்சையை வெட்டி சாறு எடுத்து அந்த சாற்றை அப்படியே அக்குள் பகுதியில் தடவவேண்டியதுதான், 10 நிமிடங்கள் வரை விட்டு பின் சாதாரண நீரினால் கழுவிக் கொள்ள வேண்டும். நீங்கள் வெயிலில் திறந்த அக்குளுடன் செல்வதாக இருந்தால் ஈரப்பத க்ரீம் ஏதாவது பூசிக்கொள்ள வேண்டும்.

எலுமிச்சை ஓட்ஸ் மற்றும் தேன் (Lemon oatmeal and honey paste)

கருமையான அக்குளால் நீங்கள் விரும்பிய ஆடைகளை அணிய முடியாமல் கவலைப்படுகின்றீர்களா? இனி கவலை வேண்டாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், எலுமிச்சை, ஓட்ஸ் மற்றும் தேன் ஆகியவற்றை சம அளவு கலந்து ஒரு பசை போல் ஆக்கி அக்குளில் தடவவேண்டியதுதான். தடவியபின் காய்ந்து உலரும் வரை விட்டு பின் சாதாரண நீரினால் கழுவிக் கொள்ள வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறை இப்படி செய்யலாம்.

இயற்கை எண்ணைய் தடவுதல் (Natural oils application on armpits)

தேங்காய் எண்ணைய், ஆலிவ் எண்ணைய் போன்ற ஏதாவது ஒரு எண்ணையில் ஒரு பஞ்சை நனைத்து அக்குளில் தடவலாம். அல்லது ஆர்கன் எண்ணைய் போன்றவற்றையும் உபயோகிக்கலாம். இந்த எண்ணைகள் கருமையைப் போக்க உதவும். எண்ணைய் இறந்த செல்களை நீக்கி சருமத்தின் துளைகளை திறந்து ஆக்ஸிஜன் போக்கிற்கு உதவும்.

தயிர், எலுமிச்சை மற்றும் ஆலிவ் (Yogurt paste wit lemon and olive oil)

கிருமி எதிர்ப்பு தயிர் சருமத்தை பளபளபாக்கும் தன்மை கொண்டது. இந்த தயிருடன் ஒரு சில துளிகள் எலுமிச்சைச் சாறு மற்றும் ஆலிவ் எண்ணைய் கலந்து பின் நேரடியாக அக்குளில் தடவ வேண்டும்.  உலரும் வரை விட்டு சாதாரண நீரினால் கழுவி பின் பஞ்சால் நன்கு துடைத்துக் கொள்ள வேண்டும். அக்குள் கருமையை நீக்க இது அருமையாக உதவும்.

உருளைக்கிழங்கு (Potato slice on dark armpits)

ஆச்சரியமா இருக்கா? சமையலில் அதிகமாக பயன்படும் இந்த உருளை, அக்குளில் இருக்கும் கருமையை  இயற்கையாக நீக்க உதவுகிறது. சில உருளைத் துண்டுகளை வட்ட வடிவில் மெல்லிய துண்டாக வெட்டி அக்குள் பகுதியில் வையுங்கள். உருளையில் உள்ள என்சைம்கள் கருமையைப் போக்கி வெண்மையைக்  கொடுக்கின்றது. ஒவ்வொரு 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருதடவை இப்படி செய்துவாருங்கள்.

ஹைட்ரஜன் பெராக்சைடு (Hydrogen peroxide to get fairer armpits)

கோடை காலங்களில் அக்குளுக்குள் வியர்த்து நாற்றம் உண்டாகி கருமையாக மாறும் தொந்தரவிலிருந்து இந்த வேதிப்பொருளான ஹைட்ரஜன் பெராக்சைடு உதவும். இந்த வேதிப்பொருள் சூப்பர்மார்க்கெட் மற்றும் மருந்துக் கடைகளில் சாதாரணமாகக் கிடைக்கும். ஒரு பஞ்சில் நனைத்து அக்குளில் தடவி வரலாம். நல்ல பலன் தரும்.

வெள்ளரி மற்றும் எலுமிச்சை ( Cucumber and lemon juice)

வெள்ளரியை நன்கு அரை்த்து அதனுடன் சில துளிகள் எலுமிச்சைச் சாறு கலந்து, இதை நேரடியாக அக்குளில் தடவலாம். மிகச்சிறந்த பலனைக் கொடுக்கும். வெள்ளரி குளுமையாக்கும் பொருள். எலுமிச்சை கருமை தோல் செல்களை நீக்கி வெளுப்பைக் கொடுக்கிறது.

பேக்கிங் சோடா உபயோகம் (Baking soda solution to get rid of dark armpits)

பளபளப்பான, வெண்மையான அக்குள் என்பது வெறும் கனவல்ல நிச்சயம் சாத்தியமான ஒன்று.  பேக்கிங் சோடா கரைசல் பயன்படுத்தி இதைப் பெறலாம். பஞ்சை பேக்கிங் சோடாவில் அமிழ்த்தி அக்குளில் தடவலாம். மேலும் எலுமிச்சை சாறு அல்லது தேங்காய் எண்ணையும் பயன்படுத்தலாம். வாரத்திற்கு 2 அல்லது 3 தடவை இப்படி செய்துவாருங்கள்.

ஆரஞ்சு தோல், எலுமிச்சை மற்றும் பன்னீர் (Orange peel with lemon juice and rose wate to treat dark armpits)

ஆரஞ்சு தோலில் ஆண்டிஆக்ஸிடென்ட் உள்ளது. இந்த தோலை எடுத்து உலரவைத்து பின் பொடியாக்கி கொள்ளவும். இந்தப் பொடியுடன் தேவையான அளவு எலமிச்சை சாறு மற்றும் பன்னீர் கலந்து பசைபோல் ஆக்கி அக்குள் பகுதியில் தடவ வேண்டும். உங்கள் அக்குள் கருமை இயற்கையாகவே மறைந்துவிடும்.

சருமத்தின் கருமையைப் போக்க ஒரு பேக் ( Packs to remove dark patches ove the skin)

சரியான மற்றும் முறையான ஒரு கலவை தயாரித்து உங்கள் அக்குள் பகுதியில் தடவி வந்தால்  நிச்சயம் அக்குள் கருமை மறைந்து வெண்மையாகும்.   இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது 2 தேக்கரண்டி கொண்டைக்கடலை மாவு மற்றும் அதனுடன் ஒரு தேக்கரண்டி தயிர். மேலும் இதனுடன் சிறிதளவு மஞ்சள் மற்றும் எலுமிச்சைசாறு கலந்து நன்கு பிசைந்து  அக்குள் பகுதியில் இதைத் தடவ வேண்டும். 30 நிமிடங்கள் வரை விட்டு பின் சாதாரண நீரினால் கழுவிக் கொள்ள வேண்டும்.

உணவுமுறை (Diet for underarm darkness)

சில நேரங்களில் இப்படி அக்குள் அடியில் கருமை ஏற்படுவது முறையற்ற அல்லது சரிவிகித உணவு உண்ணாததால் கூட இருக்கலாம். உங்கள் உணவில் அதிக சர்க்கரை மற்றும் மாவுச்சத்து இருப்பதைத் தவிர்த்துக் கொள்ளவும்

தேங்காய் எண்ணைய் (Coconut oil)

மிகப் பழமையான ஒரு மருத்துவக் குறிப்பு தேங்காய் எண்ணைய் பயன்படுத்துவது.  நேரடியாக தேங்காய் எண்ணைய் ஒரு தேக்கரண்டி எடுத்து அக்குளில் தடவி கைவிரல்களால் மிதமாக மசாஜ் செய்ய வேண்டும். இன்னும் நல்ல பலன்கிடைக்க இரவில் தூங்கப் போகும்போது தடவிக் கொள்ள வேண்டும். காலையில் குளிப்பதற்கு முன்னும் தேங்காய் எண்ணைய் தடவி 5-10 நிமிடங்கள்மசாஜ் செய்து பின் குளிக்க வேண்டும். மிதமான சோப்பு போட்டு கழுவிக் கொள்ள வேண்டும்.

பால் (Milk)

ஃபேட்டி அமிலம் மற்றும் வைட்டமீன் நிறைந்துள்ள பால் சிறந்த பலனைக் கொடுக்கும்.  2 தேக்கரண்டி பால், 1 தேக்கரண்டி மாவு மற்றும் 1 தேக்கரண்டி தயிர் எடுத்து கலந்து முழு அக்குள் பகுதியிலும் தடவிக் கொள்ள வேண்டும். கைகளை நன்கு நீட்டி வைத்து அக்குள் பகுதியில் முழுவதுமாக காற்று படும்படி இருந்தால் எளிதில் உலரும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரினால் கழுவிக் கொள்ள வேண்டும்.

தரமான டியோடரன்ட் (Use quality deo)

கோடை காலங்களில் வியர்வை நாற்றத்தைப்போக்க நாம் அனைவருமே டியோடரன்ட் பயன்படுத்துகிறோம். ஆனால் நாம் தரமான ஒன்றைப் பயன்படுத்துகிறோமா என்பதைப் பார்க்க வேண்டும். பணத்தை மிச்சம் பிடிக்க சிலபேர் வெறும் வாசனை மட்டும் வந்தால் போதுமென தரமற்ற டியோவை பயன்படுத்துகிறார்கள். இது சரியானதல்ல. இதனாலும் அக்குள் கருமையாகலாம். ஆகவே, தரமான டியோவை பயன்படுத்தி வாருங்கள்.

கற்றாழை சாறு (Aloe vera juice)

சருமத்தின் கருமையைப் போக்கும் ஒரு சிறந்த இயற்கைப் பொருள் கற்றாழை. கற்றாழை இலையை எடுத்து நடுவில் வெட்டி அதிலிரந்து ஜெல் எடுத்துக் கொள்ளவேண்டும்.  இந்த ஜெல்லை நேரடியாக அக்குளில் முழுவதுமாக தடவி சில நிமிடங்கள் வரை விட்டு பின் நன்கு கழுவிக் கொள்ளவேண்டும்.