Tamil tips to make breasts grow fast – Enhance girl busts – மார்பக வளர்ச்சியை அதிகரிப்பது எப்படி? – பெண்கள் மார்பழகை மேம்படுத்துதல்

பெரும்பாலான பருவப் பெண்கள் தங்கள் மார்பகங்கள் சரியாக வளர்ச்சியடையவில்லை என வருத்தப்படுவார்கள் ஏனெனில் இந்த வயதில் மார்பக செல்கள் இன்னும் வளர்ச்சி நிலையில்தான் இருக்கும்.

மார்பளவை அதிகரிக்க பொதுவாக பல அழகுக் குறிப்புகள் உள்ளன ஆனால் அவை பருவப்பெண்களுக்கானதல்ல. பருவவயதுப் பெண்கள் சரிவிகித உணவில் கவனம் செலுத்தி இயற்கையாக உடல் வளர்ச்சி முழுமைாக காத்திருத்தலே சரியானது. மார்பக அளவானது ஒவ்வொரு பெண்களுக்கும் அவர்களின் வயது ஹார்மோன் சுரப்பு பொருத்து மாறுபடும். ஆகையால், முழுமையான வளர்ச்சிக்கு முன்பே, பருவப் பெண்கள் மார்பளவு சிறிதாக இருக்கிறதென கவலையடைவது தேவையில்லாத ஒன்று.

சரியான மார்பக வளர்ச்சிக்கு மிக முக்கியம் முறையான சரிவிகித உணவு மற்றும் சரியான ஓய்வு. உடற்பயிற்சி செய்வது நிச்சயம் மார்பக வளர்ச்சிக்கும் சேர்த்து மொத்த உடல் வளர்ச்சிககும் உதவும். முறையாக மார்பக வளர்ச்சி இருக்கவேண்டுமெனில் குடி, புகைப்பழக்கம் மற்றும் பருவவயதில் போதை மருந்து எடுத்தல் போன்ற தவறான பழக்கங்களின் பக்கம் நெருங்கவே கூடாது.

சரியான அளவிலான உள்ளாடை மிக முக்கியம் பருவவயது பெண்களுக்கு. மிக இறுக்கமான உள்ளாடையாக இருக்கக்கூடாது. முறையான மார்பக வளர்ச்சிக்கு உதவும் சில அளவீடுகள் குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

அளவீடுகள் (Measures)

முக்கியமான விசயங்களில் ஒன்று உடல் எடையைக் கூட்டுவது. உடல் எடை கூடும் போது மார்பக அளவும் அதிகரிக்கும். மருத்துவரிடம் உங்கள் ஹார்மோன் அளவுகளைப் பரிசோதித்துக் கொள்ளலாம். மார்பக வளரச்சிக்கென சில உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். உடல் எடை கூட துரித உணவுகளை சாப்பிடக்கூடாது மாறாக கடலை, சீஸ், வெண்ணெய், தயிர், அவகோடா போன்ற சத்தான உணவுகளை உண்ண வேண்டும். உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றால் அங்கு பயிற்சியாளர்கள் சரியான உடற்பயிற்சிகளைக் கூறுவார்கள்.

புஸ்-அப் உடற்பயிற்சி என்பது முகம் தரையப் பார்த்து படுத்து கால்கள் நேராக நீட்டி, உள்ளங்கையை தரையில் அழுத்தி உடலை உயர்த்தி பின் மெதுவாக கீழே இறக்குவது. 13 முதல் 15 தடவை வரை செய்தால் கைகள் மற்றும் நெஞ்சுப்பகுதி வலிமையாவதை உணர்வீர்கள்.

நெஞ்சு பயிற்சி ஒன்று (Chest presses to grow busts)

இதில் டம்பெல் எடையை கைகளில் பிடித்து நேராக நின்று கொண்டு மெதுவாக கைகளை தோள்வரை உயர்த்தி மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர வேண்டும். ஒரு நாளைக்கு 10 முதல் 15 தடவை செய்தால் நிச்சயம் வித்தயாசத்தை உணர்வீர்கள்.

நெஞ்சுப் பயிற்சி இரண்டு (Chest flys to increase breast size and firm them)

இதை வீட்டில் மிக எளிதாக செய்யலாம். ஒரு சேரில் அமர்ந்து கைகளில் எடையை வைத்துக் கொண்டு கையை கீழிருந்து தோள்வரை உயர்த்தி பின் இறக்க வேண்டும். 12 எண்ணிக்கையில் 3 செட் ஒவ்வொரு நாளும் செய்யலாம். இரவு நேரத்தில் உள்ளாடை அணிவதைத் தவிர்க்கவும்.

பப்பாளி ஜுஸ் மற்றும் பால் குடிப்பது மார்பளவை அதிகரிக்கும் என ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. இவற்றிலுள்ள புரதம், வைட்டமீன் மற்றும் ஊட்டச்சத்துகள் இயற்கையாகவே மார்பளவை அதிகரிக்கச் செய்கிறது.

பெண்களுக்கான சில இயற்கை ஊட்டச்சத்துகள் மற்றும் மூலிகைகள் சாப்பிடுவதும் மார்பக வளர்ச்சியைத் தூண்டுகின்றது. குறைந்த காலத்தில் வித்தியாசத்தைப் பார்க்கலாம். அதிக புரதம் கொண்ட உணவுகளான முட்டை, கடலை வெண்ணெய், மீன், உலர் பருப்புகள், பால் மற்றும் கோழி இறைச்சி சாப்பிடலாம். வெள்ளை சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவுகள், சோடா, துரித உணவுகள் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

மார்பகங்களை அழுத்தி மசாஜ் செய்வது திசுக்கள் நன்கு வளர்ச்சியடைய உதவும். ஆளி விதை எண்ணெய் ஒரு ஸ்பூன் தினமும் குடிக்கலாம்.

நெஞ்சு இறுக்கப் பயிற்சி (Chest contraction)

வீட்டிலேயே செய்யமுடிந்த எளிய பயிற்சி. பாதங்கள் சற்று இடைவெளி விட்டு நின்று கொண்டு கையில் ஒரு குளியல் துண்டை முனைகளில் பிடித்து கயிறு இழுக்கும் போட்டி போன்து துண்டை இழுக்க வேண்டும். வயிற்றை சுருக்கி பின் துண்டை எதிர்திசையில் தள்ள வேண்டும். ஒரு நாளில் மூன்று முறை செய்தால் நெஞ்சில் அழுத்தம் கொடுக்கப்பட்டு மார்பளவு அதிகரிக்கும்.

எண்ணெய் மசாஜ் (Breast massage with essential oils)

தினமும் மார்பகங்களை மசாஜ் செய்வது மார்பக அளவை அதிகரிக்கச் செய்யும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. நிறைவுற்ற கொழுப்பு மற்றும் இரத்த ஓட்டம் அதிகமாகி வளர்ச்சி அதிகமாகும். ஆலிவ் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெய் சிறந்ததாகும்.

மார்ஷ்மல்லோ வேர் தேநீர் (Marshmallow root tea)

மார்பக வளர்ச்சியைத் தூண்டும் பல மூலிகைகள் உள்ளன. ஆனால் இவைகளை பயன்படுத்தும் முன்னர் மூலிகை மருத்துவரை கலந்தாலோசித்துக் கொள்ளவேண்டும். இந்த வேரை சுடுநீரில் போட்டு சற்று சர்க்கரை சேர்த்து தினமும் பருகலாம்.

மார்பக வளர்ச்சிக்கான உணவுகள் (Foods to consume for bust growth)

துவரம்பருப்பு சேர்த்தல் (Lentil for breast growth)

அதிக புரதம் உள்ள உணவுகள் மார்பக வளர்ச்சிக்கு முக்கியம். ஆகையால் தினமும் உணவில் துவரம்பருப்பு எடுத்துக் கொள்ள வேண்டும்.

சுவிஸ் சீஸ் (Swiss cheese)

அதிகமான மார்பக வளர்ச்சிக்கு சில கொழுப்பு உணவுகள் அவசியம். அவை நிறைவுற்ற கொழுப்பாக இருக்கக்கூடாது. சுவிஸ் சீஸ் அதில் சிறந்த ஒன்று

எண்ணையின் முக்கயத்துவம் (Essential oil)

சரியான உணவுகள் மட்டுமே மார்பக வளர்ச்சிக்குப் போதாது. பிரத்யோக எண்ணகளான லாவண்டர் எண்ணைய், ஆலிவ் எண்ணைய், தேங்காய் எண்ணைய் மற்றும் ரோஸ்மேரி எண்ணைய் இவற்றை ஒவ்வொன்றும் 2 சொட்டு எடுத்துக் கலந்து மார்பகங்கள் மீது தேய்த்து மசாஜ் செய்யலாம். ஒரு நாளைக்கு இரண்டு தடவை மசாஜ் செய்தால் மார்பக வடிவம் சீராகும். பருவ வயது பெண்கள் இந்த முறையை பின்பற்றலாம் எடுப்பான மார்பகங்களுக்கு.

தவிர்க்க வேண்டிய உணவுகள் (Foods to avoid for breast growth)

எப்படி சில உணவுகள் மார்பக வளர்ச்சியைத் தூண்டுகின்றனவோ அதேபோல் சில உணவுகள் வளர்ச்சியைத் தடுப்பவையாகவும் உள்ளவையால் அவைகளை உட்கொள்வதை தவிர்க்கவும் வேண்டும்.

வெள்ளை சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் (Sugar and carbohydrate)

சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் சரிவிகித உணவில் முக்கயமானவை என்றாலும் இவற்றை அதிக அளவு உண்பது மார்பக வளர்ச்சியைத் தடுக்கும். நாம் உண்ணும் சுவையான எல்லா உணவுகளிலும் பெரும்பாலும் சர்க்கரை உள்ளது. இவை உடலில் டெஸ்டோஸ்டிரான் அளவை அதிகரிக்கச் செய்து ஈஸ்ட்ரோஜன் சுரப்பை குறைத்துவிடும். ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் மார்பக வளர்ச்சிக்கு மிக முக்கியம்.

காப்ஃபைன் (Caffeine)

நாம் தினமும் குடிக்கும் காப்பி மற்றும் குளிர்பானங்களில் காப்ஃபைன் உள்ளது. மார்பக வளர்ச்சி பற்றி கவலைப்படுவோர் இதைத் தவிர்ப்பது நல்லது.

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் (Processed chicken and meat)

பிராய்லர் கோழிகளில் அதிக எடைக்காக அதிகமாக ஹார்மோன்கள் செலுத்தப்படுகிறது. ஒருவர் இத்தகைய இறைச்சியை உட்கொள்ளும்போது அந்த ஹார்மோன்கள் உடலுக்குள் சென்று உடலின் இயற்கையான ஹார்மோன் சுரப்பை பாதிக்கும்.

வளர்இளம் பெண்களுக்கு சரியான அளவு ஹார்மோன் விகிதம் முக்கியமானது. ஆகவே, இவர்கள் பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவை எடுப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும்.

கருத்தடுப்பு மாத்திரைகள் (Birth control pills)

உண்மையில், மார்பக வளர்ச்சிக்கு இது உகந்த மற்றும் பாதுகாப்பான முறையல்ல. கருத்தடுப்பு மாத்திரைகள் அடிக்கடி எடுப்பது பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். மார்பகங்கள் சரியான வளர்ச்சியில்லை எப்படியாவது பெரிய மார்பகங்கள் வேண்டும் என நினைப்பவராக இருந்தால் கருத்தடுப்பு மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம்

இந்த மாத்திரை ஓஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பை கட்டுப்படுத்தி மார்பக வளர்ச்சியை அதிகரிக்கும். முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று என்னவெனில் இந்த மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனையுடன் தான் எடுக்க வேண்டும்.

பெண்கள் மார்பக வளர்ச்சிக்கான உணவுகள் (Diet for female breast growth)

ஈஸ்ட்ரோஜன் அதிகமுள்ள உணவுகள் மிக முக்கியம். ஹார்மோன்கள் சரியான விகித்தில் இல்லாதது மார்பக வளர்ச்சியின்மைக்கு ஒரு முக்கியமான காரணம். ஈஸ்ட்ரோஜன் அதிகமுள்ள சில உணவுகள்.

  • பழங்கள் & காய்கறிகள் இவைகளில் அதிக ஈஸ்ட்ரோஜன் உள்ளது. பேரிச்சை, செர்ரி, ஆப்பிள் மற்றும் பிளம் பழங்கள் அதிகம் உணவில் சேர்க்கலாம்
  • வெந்தயம் மார்பக வளர்ச்சியை தூண்டுவதில் வெந்தயம் முக்கியமானது. ஆகவே, வெந்தயம் சேர்த்த உணவுகள் உட்கொள்ள வேண்டும்.
  • சோயாபருப்பு சோயா வகைகளில் ஈஸ்ட்ரோஜன் மிக அதிகம் ஆகவே சோயா பால், சோயா பருப்பு வெண்ணெய், சோயா பிரட் என எடுத்துக் கொள்ளலாம்
  • ஆளிவிதை இவைகளும் மார்பக வளர்ச்சியை தூண்டுவதில் முக்கியமானது. இதுபோக பூசணி விதை, சூரியகாந்தி விதைகளும் எடுத்தக் கொள்ளலாம்.
  • பருப்பு வகைகள் இயற்கையான முறையில் ஈஸ்ட்ரோஜனை அதிகப்படுத்த துவரம் பருப்பு, கொள்ளு, மொச்சை என சாப்பிடலாம்.

பொதுவாக பொறுமை மிக முக்கியம், மேலே குறிப்பிட்டவைகளை பின்பற்றினால் மார்பக வளர்ச்சி சீராக இருப்பதை உணர முடியும். பருவ வயதை அடையக்கூடிய பெண்களாக இருந்தால் மார்பக வளர்ச்சிக்கு கொஞ்ச காலம் எடுக்கும்.

மார்பக வளர்ச்சிக்கான குறிப்புகள் (Tips to increase breast size)

  • மசாஜ் அடிக்கடி செய்வது மார்பக வளர்ச்சிக்கு உதவும்.
  • குளிர்பானங்கள், தேநீர், மது போன்றவைகளை தவிர்க்க வேண்டும்.
  • துரித உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
  • அதிகமாக தண்ணீர் குடித்தல் மற்றும் வழக்கமாக உடற்பயிற்சியில் ஈடுபடுதல்