IYARKAIYA PARUKKALAI NEEKUVATHU EPPADI – இயற்கை முறையில் பருக்களை நீக்குவது எப்படி?

முகப் பருக்கள் சாதாரணமாக எந்த வயதினரையும் தாக்கக் கூடிய ஒரு சருமப் பிரச்சனையாகும். முகத்தில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பதின் மூலம் இந்த மாற்றம் நிகழ்கிறது. நமது தோலுக்கு அடியில் உள்ள அழுக்குப் படலங்கள், சுரப்பிகளை அடைத்துக் கொள்வதனால் ஏற்படுகிறது. முகப் பருக்களை நீக்க, ஏராளமான வீட்டுக் குறிப்புகள் எளிய முறையில் உள்ளன.

முகப் பருக்கள் தோன்றுவதன் காரணம் (Causes for pimples )

முகப் பருக்களை நீக்க, அதன் மூல காரணத்தைத் தெரிந்து கொள்வது அவசியம். பருக்கள் மிகவும் அதிகமாக, வேறு சில தொந்தரவுகளுடன் இருத்தல், ஆபத்தானவையாகும். ஹார்மோன் குறைப்பாட்டுகளின் காரணமாகவும், பருக்கள் தோன்றலாம். முகத்தை சுத்தமாக வைக்காதது மூலவும், பருக்கள் வரக் கூடும். பரம்பரை, சுற்றுச்சூழல் மாசு, சூரிய ஒளி படுதல், துரித உணவுகள், இவற்றின் மூலம் பருக்கள் வர அதிக காரணம் இருக்கிறது.

இதனை எளிதில் சமாளிக்க இதோ சில குறிப்புகள்,

எண்ணெய் வகைகள் (Essential oils to remove Pimples or Acne )

எலுமிச்சை எண்ணெய் (Lemon essential oil for pimples)

இதில் ஆஸ்டிரிஞ்சன், கிருமி நாசினிகள் அதிக அளவில் இருப்பதால், எண்ணெய் சுரப்பதைக் கட்டுப்படுத்தும்.

திராட்சை விதை எண்ணெய் (Grapeseed oil to get rid of pimples )
திராட்சை விதை எண்ணெயில் அதிக அளவில் வைட்டமின் ஈ சத்து இருப்பதால், பருக்களினால் உண்டாகும் தழும்புகளை விரைவில் நீக்கக் கூடியது.

எலுமிச்சைப் புல் எண்ணெய் (Lemongrass oil for a pimple )

எலுமிச்சைப் புல் எண்ணெய், மோப்ப உணர்வைத் தூண்டி, தோலைப் புத்துணர்வு செய்யக் கூடிய தன்மையைக் கொண்ட்து. தோலின் சத்தானதாக ஆக்குவதன் மூலம், பருக்களைக் கட்டுப் படுத்தும் ஆற்றல் கொண்ட்து.

ஆர்கன் எண்ணெய் (Argan oil to get rid of acne )

ஆர்கன் எண்ணெய்க்கு வீக்கங்களைக் குறைக்கும் தன்மை அதிகம் இருப்பதால், தோலின் ஈரப்பதத்தைப் பாதுகாத்து, பருக்களினால் ஏற்படும் தழும்புகளை சரி செய்யும்.

விளக்கெண்ணெய் (Castor oil for Pimples )

விளக்கெண்ணெயில் ரிசினோலெய்க் அமிலம் (ricinoleic acid) என்ற அமிலம் இருப்பதால், பருக்களை ஏற்படுத்தும் கிருமிகளை எதிர்த்துப் போராடும். முகத்தின் அதிகப்படியான எண்ணெய், அழுக்கு, அடைத்த சுரப்பிகளைச் சுத்தம் செய்தல் போன்றவற்றினால் பருக்களை நீக்கும்.

மீன் எண்ணெய் (Fish oil to get rid of pimples )

ஒமேகா-3 கொழுப்புச் சத்து அதிகம் உள்ளதால், உடல் ஆரோக்கியத்திற்கும், சருமத்திற்கும் மீன் மிகவும் ஏற்ற உணவாகும். இந்த எண்ணேயினால் பளிச்சென்ற முகமும், கிருமிகள் அற்ற சரும்மும் கிடைக்கும்.

தேங்காய் எண்ணெய் (Coconut oil to get rid of pimples)

தேங்காய் எண்ணெயில், எம்சிஃப்ஏ தவிர, அதிக அளவில் கொழுப்புச் சத்து உள்ளது. இதனால், முகத்தில் இருக்கும் தழும்புகளை நேர்த்தியான முறையில் அகற்றி, கிருமிகளையும் கொல்லும்.  

ஆலிவ் எண்ணெய் (Olive oil for acne )

பருத் தழும்புகளை நீக்க, ஆலிவ் எண்ணெய் மிகச் சிறந்த நிவாரணி ஆகும். இதில் அதிக அளவு வைட்டமின் சத்துக்களும், வீக்கங்களைக் குறைக்கும் தன்மையும் கொண்டதால், தழும்புகளை விரைவில் நீக்கும் தன்மை கொண்டது.

சாம்பிராணி எண்ணெய் (Frankincense oil to remove pimples or acne overnight)

ஒரே நாளில் பருக்களைப் போக்க வேண்டுமா? 1-2 சொட்டு சாம்பிராணி எண்ணெயை எடுத்து, பஞ்சினைக் கொண்டு, முகத்தில் நேரடியாகப் பூசவும். கிருமிகளை அழித்து, வீக்கங்களைக் குறைக்கும். இறந்த செல்களை நீக்கி, புது செல்களை உற்பத்தி செய்யும். இந்த எண்ணெயை இவ்வாறு தினமும் இரவு முகத்தில் தடவி, விட்டு விடவும். எந்த விதமான சருமத்திற்கும் ஏற்றது.

எளிய வீட்டுக் குறிப்புகள் (Quick home remedies to remove pimples)

வாசலின் (Vaseline to get rid of acne)

இரவு படுக்கும் முன் முகத்தைக் கழுவி, துடைக்கவும். வாசலினை முகம் முழுவதும் நன்கு பூசி, மசாஜ் செய்யவும்.

கண் மருந்து (Eye drops to get rid of pimples)

கண் மருந்தை, தழும்புகள் நீக்கப் பயன்படுத்தலாம். இதில் டெட்ராஹைட்ரோசோலின் ஹைட்ரோகிளோரைட் (tetrahydrozoline hydrochloride) இருப்பதால், பருக்களை நீக்க உதவுகிறது. பருக்களின் மீது மருந்தைத் தடவி, இரவு முழுவதும் விடவும்.

உப்புத் தண்ணீர் (Salt water to get rid of pimples )

உப்புத் தண்ணீரை, பருத் தழும்புகள் மீது பூச, தழும்புகள் மறையும். 1 டீஸ்பூன் கடல் உப்பை 3 டீஸ்பூன் சுடு நீரில் போட்டு, நன்கு கலக்கவும். இதனை பருத்திப் பந்தினைக் கொண்டு, முகத்தில் தடவி, இரவு முழுவதும் விடவும்.

இளநீர் (Coconut water to get rid of pimples)

பருக்களை நீக்கி, முகத்திற்குப் பொலிவைத் தரக் கூடிய ஒன்று இளநீராகும். அப்போது எடுத்த இளநீரை எடுத்துக் கொள்ளவும். ஒரு பஞ்சுப் பந்தை எடுத்து, இளநீரைத் தோய்த்து, முகத்தில் நன்கு பூசவும். ஒரு நாளுக்கு இரண்டு முறை பூசவும்.

பருக்களைப் போக்கும் தயிர் (Yogurt to get rid of pimples)

தயிரில் இயற்கையிலேயே லாக்டிக் அமிலம் இருப்பதால், பருக்களையும் தழும்புகளையும் நீக்க வல்லது. கிருமிகளை அழிப்பதுடன், சருமத்தின் அமிலத் தன்மையெனும் பிஎச்(pH) அளவையும் சமநிலையாக்கும் ஆற்றல் கொண்டது.

அரிசி கலைந்த நீர் (Rice water to get rid of pimples)

அரிசி கலைந்த நீர் இயற்கையாக முகத்தைப் பொலிவு பெற உதவும். ஒரு கிண்ணத்தில் அரிசியை எடுத்துக் கொள்ளவும். அதில் நீரை ஊற்றி, 15 நிமிடங்கள் ஊற விடவும். இந்த நீரை, பஞ்சுப் பந்தினால் தோய்த்து எடுத்து, பருக்கள், தழும்புகள் இருக்கும் இடத்தில் ஒற்றி எடுக்கவும். ஒரு நாளுக்கு இரண்டு முறை செய்யவும்.

கிளிசரீன் (Glycerin to get rid of pimples)

கிளிசரீன் அனைத்து விதமான சருமத்திலும் துரிதமாக வேலை செய்யும். ம்கத்தின் ஈரப் பசையைப் பாதுகாப்பதுடன், கிருமிகளிடம் இருந்தும் பாதுகாக்கும். இதனால் சருமம் பளபளப்பாகக் காட்சியளிக்கும்.

பால் (Milk to get rid of pimples)

பாலில் ஹார்மோன்கள் மற்றும் டிஎச்டி அதிக அளவில் இருக்கிறது. இதனால், சருமத்தின் மீது அதிக ஆற்றலுடன் செயல்படக்கூடியது. காய்ச்சாத பாலைப் பருத்திப் பந்தில் தோய்த்து, பருக்கள் மீது தடவவும். இப்படி, நாளுக்கு இரண்டு முறை செய்ய, பலன் கிடைக்கும்.

ஆஸ்பிரின் (Aspirin for pimples)

சாலிஸிலிக் அமிலம் கொண்ட ஆஸ்பிரின் மாத்திரைகள் தழும்புகளை நீக்க வல்லது. ஒரு மாத்திரையை எடுத்து, பொடித்துக் கொள்ளவும். இதை 1 டேபிள்ஸ்பூன் தண்ணீரில் ஊற வைக்கவும். கெட்டியான கலவையாகச் செய்து, பருக்கள் மீது தடவவும். ஒரு இரவு முழுவதும் விட்டு, காலையில் கழுவவும்.

பனிக்கட்டி (Ice to get rid of pimples)

பனிக்கட்டி கட்டியில் ஒன்றை எடுத்து, பருக்கள் மீது தடவ்வும். இப்படிச் செய்து வர, வீக்கங்கள் குறைந்து, பருக்கள் குறையும்.

கற்றாழை (Aloe vera for acne and pimple marks)

கற்றாழைச் சதையை எடுத்து, கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து, கழுவவும். கற்றாழை கரும்புள்ளிகள், தழும்புகள் மறைய, ஒரு சிறந்த நிவாரணியாகும்.

பேக்கிங் சோடா (Baking soda)

பேக்கிங் சோடாவுடன் வெதுவெதுப்பான நீரையோ அல்லது ஆலிவ் எண்ணெயைக் கலக்கவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி, 10-15 நிமிடங்கள் காய விடவும். காய்ந்ததும், சக்கர வடிவில் மெல்லிய அழுத்தம் கொடுத்து தேய்க்கவும். இப்படி வாரத்தில் ஒரு முறை செய்யவும்.

பற்பசை (Toothpaste to get rid of pimples overnight)

பற்பசையில் சிறிதளவு எடுத்து, பருக்கள் மீது தடவவும். இரவு முழுக்க விட்டு, காலையில் தண்ணீரைக் கொண்டு கழுவ, பருக்கள் விரைவில் மறையும். ஜெல் வடிவ பற்பசையைத் தவிர்க்கவும். வெள்ளைப் பசைகள் சிறந்தது.

சந்தனம் (Sandalwood face pack)

தூய சந்தனக் கட்டையை அரைத்து, குழைத்துக் கொள்ளவும். அதனுடன் சிறிது கிளிசரீன் மற்றும் பன்னீரைச் சேர்த்து, முகத்தில் பூசி, காய்ந்ததும், குளிர் நீர் கொண்டு கழுவவும். கரும்புள்ளிகள், பருக்கள், தழும்புகள் விரைவில் மறையும்.

தழும்புகளை நீக்கும் பப்பாளி (Papaya pack to reduce pimple marks or acne marks)

நன்கு பழுத்த பப்பாளியை எடுத்துக் கொள்ளவும். அதை நறுக்கி, கூழாக்கவும். இந்தக் கூழை முகத்தில் தடவி, 10-15 நிமிடங்கள் நன்கு காய விடவும். பிறகு, நீரினால் கழுவி, சுத்தம் செய்யவும்.

வெள்ளரி (Cucumber to get rid of pimples)

கரும்புள்ளிகளை லேசாக்க, இந்த முறையைப் பின்பற்றவும். சில துண்டு வெள்ளரியை அரைத்து, அதனுடன் சிறிது பன்னீரைச் சேர்க்கவும். இந்தக் கலவையை பருக்கள் மீது தடவி, நன்கு காய்ந்ததும், தண்ணீரினால் கழுவவும்.

புதினா (Mint remedy to remove pimples fast)

புதினா இலைகளில் அதிக அளவு கிருமி நாசினி இருப்பதால், பருக்கள் மீது நல்ல ஆற்றலைத் தரும். சில புதினா இலைகளை எடுத்து, நீர் கலந்து, அரைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையைப் பருக்கள் மீது தடவி, 20-30 நிமிடங்கள் காய விடவும். நன்கு காய்ந்ததும், தண்ணீரினால் முகத்தைக் கழுவவும்.

பருக்களைத் தடுக்கும் வழிமுறைகள் (Acne prevention tips)

வரும் முன் காப்பது சிறந்தது. பருக்கள் வராமல் தடுக்கவும், படராமல் பாதுகாக்கவும் இங்கே சில வழிமுறைகள் கொடுக்கப் பட்டுள்ளது.

  1. நாளுக்கு இரண்டு முறை முகத்தைக் கழுவவும்.
  2. முடியை சுத்தமாக வைத்து, இரண்டு நாளுக்கு ஒரு முறை அலசவும்.
  3. பருக்களைக் கிள்ளுவதோ, கீறுவதோ வேண்டாம்.
  4. பருக்களைத் தூண்டும் உணவுகளைத் தவிர்க்கவும்.
  5. எண்ணெய் உணவுகளைத் தவிர்க்கவும்.
  6. அழகு சாதனப் பொருட்களை சுத்தமாக வைக்கவும்.
  7. லேசர் மற்றும் இதமான மருத்துவங்களை நாடவும்.
  8. சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்க, கழிம்புகளைப் பயன்படுத்தவும்.
  9. ஹார்மோன் மருந்துகளை எடுக்கும் முன்பு மருத்துவரைப் பரிந்துரை செய்யவும்.
  10. இயன்றவரை சருமத்தின் மேல் மட்டுமே சிகிச்சை மேற்கொள்ளவும்.