VAYITRU SATHAIYAIK KURAITHAL – கருக்கலைப்பு நடந்த பின் வயிற்று சதையைக் குறைப்பது எப்படி?

வயிற்றுப் பகுதியில் சதை அதிகமாகி தொப்பை ஏற்படுவது எல்லோருக்கும் ஒரு வித அசௌகரியத்தை ஏற்படுத்தத்தான் செய்யும். பெண்களுக்கு சில காரணங்களால் கருக்கலைப்பு செய்யும்போது இயற்கையாகவே வயிற்றுப் பகுதயில் சதை அதிகமாக போட ஆரம்பிக்கும். கருக்கலைப்பு என்பது ஒரு சில அபாயகரமான சூழ்நிலைகளில் கருப்பையில் உள்ள சிசுவை நீக்குவது. பொதுவாக இரண்டு வகை உள்ளது ஒன்று தானாகவே கரு கலைந்துவிடுவது. மற்றொன்று ஏதாவது சில காரணங்களுக்காக கருவை கலைப்பது.

கருவை கலைப்பது என்பது மருத்துவ சிகிச்சை முறையில் கருவை நீக்குவது. கரு கலைவதென்பது எதிர்பாராத விதமாக கரு தானாக கலைந்து கருப்பை விட்டு வெளியேறுவது. எந்த வகையில் இப்படி கருகலைவு நடந்தாலும் பெண்களுக்கு வயிற்றுப் பகுதயில் சதை போட வாய்ப்புகள் அதிகம்.

கொழுப்பை குறைப்பது என்றால் உடலில் எல்லா இடத்திலும் தேவையற்ற கொழுப்பைக் குறைக்கும்போது அது வயிற்று பகுதியில் உள்ள கொழுப்பையும் கரைப்பதாகும். கருகலைப்பு நடந்தபின் வயிற்றுப் பகுதியில் அதிகமான கொழுப்பு சதையைக் குறைக்க சில வழி முறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த முறைகளில் கொழுப்பு குறையும் வேகம் மெதுவாக இருந்தாலும் இது பலன் தரக்கூடிய மற்றும் பாதுகாப்பான முறைகளாகும்.

கருக்கலைப்பிற்குப் பிறகான வயிற்றுக் கொழுப்ப சதையை குறைக்கும் வழிகள் (Tips to lose belly fat after abortion)

சரியான ஊட்டச்த்து (Ensure adequate nutrition)

கருக்கலைப்பு ஆகும் பெரும்பாலான பெண்களுக்கு பின்னர் ஆரோக்கியமற்ற கொழுப்பு சதைகள் வயிற்றுப் பகுதியில் அதிகமாக வாய்ப்புகள் அதிகம். இவர்கள் சரியான ஊட்டச்சத்து இவர்களுக்கு கிடைக்கவில்லை என்றால் நிலைமை இன்னும் மோசமாகும். ஊட்டச்சத்து குறைபாட்டால் செரிமாணம் மற்றும் மெட்டபாலிக் அமைப்பு செயல்பாடுகளில் குறைவு ஏற்பட்டு அதனால் தேவையற்ற கொழுப்புகள் உடலில் சேரும். இதை முறையாக கவனிக்கத் தவறினால் பின்னால் பிரச்சனையாகும்ஆகவே, முறையான சரிவிகித உணவு எடுக்க வேண்டும். புரதம், இரும்புச்சத்து, வைட்டமீன்கள் மற்றும் ஆரோக்கியமான கார்போஹைட்ரேட் சரி அளவில் இருக்கும் உணவாக தினசரி உணவு இருக்க வேண்டும்.

போதுமான அளவு நீர் அருந்துதல் (Adequate hydration is a must)

உடலில் போதுமான அளவு நீர் இல்லாமல் இருந்தால் உடலில் நச்சுக்கள் முறையாக வெளியேறாமல் தங்கிவிடும். இதனால் உள்ளுறுப்புகளான இரைப்பை, கல்லீரல் மற்றும் பல உறுப்புகள் சரியாக செயல்படாமல் போகும். இதனால், உடலில் கொழுப்பு தங்கும் வீதம் அதிகரிக்கும். ஆகவே, முறையான அளவு தண்ணீர் அருந்துவது மிக மிக அவசியம். தினமும் பழச்சாறு அருந்துதல் மிக நல்லது.

மனஅழுத்தத்தைத் தவிர்த்தல் (Avoid stress, strain and depression)

மன அழுத்தம், மனச்சிதைவு போன்ற பிரச்சனைகளால் நீங்கள் பாதிக்கப்பட்டால் அது உடல் உறுப்புகளின் செயல்பாடுகளையும் பாதிக்கும். அமைதியான மனநிலை பாதிப்பதோடு உடல் நலமின்மையும் ஏற்படுத்திவிடும்ஆகவே, அழுத்தமான மனநிலையைிலிருந்து வெளிவந்து உடல் ஆரோக்கியத்தைக் காக்கும்போது உடலில் தேவையற்ற கொழுப்பு படிவதும் குறையும்.

ஆரோக்கியமான உணவுகள் (Adope a healthy eating habit)

சரிவிகித உணவு உண்பது எவ்வளவு முக்கியமோ அதே போல் ஆரோக்கியமான தரமான உணவு உண்பதும் மிக முக்கியம். சந்தைகளில், ஹோட்டல்களில் கிடைக்கும் தரமற்ற துரித உணவுகள், அதிகமான கெட்ட கொழுப்பு உள்ள உணவுகள் மற்றும் அதிக கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை உண்பதைத் தவிர்க்க வேண்டும். இப்படியான உணவுகளை உண்டால் அதிகமான கார்போஹட்ரேட் செரிமாணமாகி அது கொழுப்பாக மாறி உடலில் தங்கிவிடும்.

உடற்பயிற்சிகள் (Physical activities)

வழக்கமாக உடற்பயிற்சி செய்து வரவேண்டும். உடற்பயிற்சிகள் மூலம் சற்று அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் கொழுப்புகள் கரையும்.

குறைந்த கார்போஹைட்ரேட் (Low Carbs)

கருக்கலைப்பிற்குப் பிறகு ஏற்படும் வயிற்றுப்பகுதி சதைகளை நீங்கள் குறைக்க விரும்பினால், உங்கள் உணவில் குறைந்த அளவு கார்போஹைட்ரேட் இருக்கமாறு நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். அதிகமான கார்போஹைட்ரேட் செரிக்கும்போது கொழுப்பாக மாறி உடலில் சேமிக்கப்படும்.

வயிற்று பெல்ட் (Belly wrapping)

வயிற்றை இறுக கட்டுவது என்பது ஒரு பழங்கால வழக்கமாகும். வயிற்றில் இறுக பெல்ட் கட்டி தசைகளை சீராக்கி வயிற்றுப்பகுதி கொழுப்பைக் கரைக்கலாம்.

பச்சைத் தேயிலை தேநீர் (Green tea)

பச்சைத் தேயிலை உடலின் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்தும். பச்சைத் தேயிலையில் அதிகமான ஆன்டிஆக்ஸிடென்ட் உள்ளது இது உடல் எடையைக் குறைக்க உதவும்.

முறையான சரிவிகித உணவு (Effective diet)

  • குறைந்தபட்ச கலோரி எவ்வளவு தேவையோ அந்தஅளவு மட்டுமே உணவு எடுக்க வேண்டும்உடலில் ஏற்கனவே தங்கியிருக்கும் கொழுப்பைக் கரைக்க பளு தூக்கும் பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக துரித உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். எந்த ஒரு குளிர்பானங்களும் குடிக்கக் கூடாது.
  • சர்க்கரை அறவே கூடாது. குறைந்த அளவு சர்க்கரையில் அதிகஅளவு கலோரி கிடைக்கும். இது இரத்த சர்க்கரையையும் அதிகரிக்கும். சர்க்கரை நோய் வர வாய்ப்புகளை அதிகரிக்கும்.
  • பழுப்பு அரிசியை பயன்படுத்த வேண்டும். பழுப்பு அரிசியில் நார்ச்சத்து அதிகம். கொலஸ்ட்ராலையும் கட்டுப்படுத்தும்.
  • உடல் எடை குறைய சாப்பிடுவதைத் தவிர்க்கக்கூடாது. பசியில் கிடப்பது எந்த வகையிலும் உதவாது. பசியாக இருக்கும்போது உடல் அதிக கலோரிகளை சேமிக்க ஆரம்பித்துவிடும்.
  • எண்ணையில் பொறித்த உணவுகளைத் தவிர்த்து அவித்த உணவுகள் சாப்பிட வேண்டும். எண்ணையில் பொறித்த உணவுகளில் கொழுப்பு அதிகம் இதனால் வயிற்றில் கொழுப்பு சேர்ந்து வயிறு பெருக்க ஆரம்பிக்கும்.
  • உடலில் கொழுப்பு குறைவதைத் தடுக்கும் மிக முக்கிய இரண்டு பொருட்கள் குளிர்பானமும் மதுவும். கருக்கலைப்பிற்குப் பிறகு மது அருந்துவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. பதப்படுத்தப்பட்ட குளிர்பானங்களில் அதிக அளவு சர்க்கரை உள்ளது. இது செரிமாணம் ஆகும்போது கொழுப்பாகத்தான் சேமிக்கப்படும். அதற்கு பதிலாக பழச்சாறு அருந்தலாம். சூப்பு குடிக்கலாம்
  • .அதிகமான பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிட வேண்டும். உடலுக்குத் தேவையான புரதம், கால்சியம், வைட்டமீன்கள் பழங்கள் மற்றும் காய்கறிகள் மூலமாகத்தான் கிடைக்கும்உடலில் கொழுப்பு சேர்வதைத் தடுக்கும்.
    நன்கு பசிக்கும்போது நல்ல பொறித்த உணவுகள் அல்லது துரித உணவு ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றும். இப்படி தோன்றும் போது நீர் அருந்தினால் அத்தகைய எண்ணம் குறையும்போதுமான அளவு நீர் அருந்துவது மிக மிக அவசியம். 6 லிருந்து 8 லிட்டர் நீர் ஒரு நாளைக்கு அருந்தலாம்.

எளிமையான உடற்பயிற்சிகள் (Simple exercises)

  • கருக்கலைப்பு ஆனபிறகு சரியான காலம் ஓய்வு எடுத்தபின் எளிமையான சில உடற்பயிற்சிகள் மேற்கொள்ளலாம். உடற்பயிற்சி கூடத்தில் சேரவோ மற்றும் அதிக எடை தூக்கி உடற்பயிற்சி செய்யவோ வேண்டியதில்லை. எளிமையான உடற்பயிற்சிகள் மற்றும் யோகா செய்வதை வழமையாக்கலாம். நடத்தல், சிறு ஓட்டம் ஓடுதல், தியானம் செய்தல் மற்ற பல யோகா பயிற்சிகளையும் செய்யலாம். இதன் மூலம் வயிற்றுப் பகுதி சதைகள் குறையும்.